Don't Miss!
- Technology
Oneplus Nord 2T 5G வந்தாச்சு: பட்ஜெட் விலையில் நச்சுனு அம்சம்- கொடுக்குற காசுக்கு தகுமா?
- News
வருமான வரித்துறையிடம் எனக்கு லவ் லெட்டர் வந்திருக்கிறது.. ஐடி நோட்டீஸ் குறித்து சரத்பவார் கிண்டல்
- Lifestyle
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- Automobiles
ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!
- Finance
தங்கம் ஆர்வலர்கள் பெரும் ஷாக்.. இறக்குமதி 5% அதிகரிப்பு.. இனி விலை என்னவாகும்
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தலைவா....ரசிகர்களின் அன்புமழையில் நனைந்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் பண்டிகையையொட்டி தனது வீட்டுமுன் கூடிய ரசிகர்களுக்கு நேரில் தோன்றி வாழ்த்து தெரிவித்தார் அப்போது ரசிகர்கள் தலைவா என கோஷமிட்டனர்.
ரஜினியின் 'பேட்ட’.... மரண மாஸ் வெளியாகி 3 வது ஆண்டு...'90-களின் ரஜினி' கொண்டாடிய ரசிகர்கள்

அரசியலுக்கு முழுக்கு போட்ட ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் ஒவ்வொரு பொங்கலும் கோலாகலமாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இரண்டாவது அலை தொடங்கிய நேரத்தில் திடீரென அரசியலுக்கு வரவில்லை என அறிவித்தார். இதனால் ரசிகர்கள் சோர்வடைந்தனர்.

ஓய்வில் இருக்கும் ரஜினி
இந்நிலையில் திடீரென ரஜினிகாந்துக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு சில நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பினார். பொதுவாக பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துக்கொள்ளாத ரஜினிகாந்த் இந்த நிகழ்வுக்குப்பின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளவில்லை. அவரது அண்ணாத்த படம் வெளியானபின் புதுப்படம் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

அடுத்த படம் வருமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
அடுத்து சில படங்களில் அவர் நடிக்கலாம் கதைக்கேட்டு வருகிறார் என்றெல்லாம் யூகங்கள் உலாவினாலும் அதிகாரபூர்வமாக அவர் தரப்பிலிருந்து எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த ஜனவரி 1 புத்தாண்டு அன்று வீட்டும்முன் கூடியிருந்த ரசிகர்கள் முன் திடீரென தோன்றிய ரஜினி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சில நிமிடங்கள் மட்டும் ரசிகர்கள் முன் வந்து வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

நேரில் தோன்றி வாழ்த்துச் சொன்ன ரஜினி
இன்று பொங்கல் திருநாளை ஒட்டி காலையில் தனது ட்விட்டர் பக்கத்திலும், ஹூடே வாய்ஸ் மெசேஜிலும் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். "அனைவருக்கும் வணக்கம், கஷ்டமான, ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்திகிட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக்காத்துக்கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவும் கிடையாது. அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்" என தெரிவித்திருந்தார்.

வீட்டுமுன் குவிந்த ரசிகர்கள்
இந்நிலையில் இன்று காலைமுதலே தனது தலைவருக்கு பொங்கல் வாழ்த்து கூறவும், அவரைக்காணவும் ரசிகர்கள் ரஜினிகாந்த் வீட்டுமுன் குவிந்திருந்தனர். சூப்பார்ஸ்டார் வாழ்க தலைவா வாழ்க பொங்கல் வாழ்த்துகள் என கோஷமிட்டப்படி இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்கதவு திறக்க வெளியில் வேகமாக வந்த ரஜினிகாந்த் கேட்டுக்கு முன் இருந்த ஸ்டூல் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி வேகமாக கையை ஆட்டினார். வாழ்த்துகளை தெரிவித்தார்.

சந்தோஷத்தில் கலைந்துச் சென்ற ரசிகர்கள்
இதைப்பார்த்து சந்தோஷப்பட்ட ரசிகர்கள் தலைவா என ஆராவாரம் செய்தனர். பின்னர் அவர்களை நோக்கி கும்பிட்ட ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அமைதியாக கலைந்துப்போகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றார். தங்கள் எதிர்ப்பார்ப்பு நிறைவேறிய சந்தோஷத்தில் ரசிகர்களும் கலைந்துச் சென்றனர்.