நான் 'தலைவா' தான், 'பாத்ஷா' இல்லை: விஜய்
சென்னை: தெலுங்கு படமான பாத்ஷா தமிழ் ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., காஜல் அகர்வால், நவ்தீப் ஆகியோர் நடித்த படம் பாத்ஷா. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிவிபி சினிமா வாங்கியுள்ளது என்றும், தமிழில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்கவிருக்கிறார் என்றும் பாத்ஷா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் பாத்ஷா தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ரீமேக் படங்களில் அதிக அளவில் நடிக்கும் விஜய் தான் இந்த ரீமேக்கிலும் நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன.

நான் பாத்ஷா அல்ல
பாத்ஷா தமிழ் ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என்றும், அப்படி வந்த செய்திகள் வெறும் வதந்தி என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

நண்பன் விஜய்
இந்தி படமான 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய் நடித்தார். இயக்குனர் சங்கர் தன் வாழ்நாளில் முதன் முதலாக எடுத்த ரீமேக் படம் இது தான். படம் இந்தி அளவுக்கு இல்லாவிட்டாலும் ஹிட்டானது.

வேலாயுதம்
நாகர்ஜுனா நடித்த தெலுங்கு படமான ஆசாத் தமிழில் வேலாயுதம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. விஜய், ஜெனிலியா, ஹன்சிகா நடித்தனர்.

காவலன்
மலையாள படமான பாடிகார்டின் தமிழ் ரீமேக் தான் காவலன். விஜய், அசின் ஜோடி சேர்ந்த இந்த படம் ஹிட்டானது.

போக்கிரி
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான போக்கிரி படம் தமிழில் அதே பெயரில் பிரபுதேவாவால் ரீமேக் செய்யப்பட்டது. விஜய், அசின், பிரகாஷ் ராஜ் நடித்த இந்த படம் ஹிட்டானது.

வில்லு
போக்கிரியை அடுத்து பிரபுதேவா விஜய், நயன்தாராவை வைத்து இந்தி படமான சோல்ஜரை வில்லு என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார். படம் ஊத்திக் கொண்டது. இருப்பினும் இது பிரபுதேவாவுக்கு மறக்க முடியாத படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











