ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட்… தலைவர் 169 மாஸ் அப்டேட் நாளை!
சென்னை : ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 திரைப்படம் குறித்த தரமான அப்டேட் நாளை வெளியாக உள்ளது.
ரஜினியின் பிறந்தநாள் அன்று தலைவர் 169 படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போது தலைவர் 169 படத்திற்கான மாஸான டீம் தயாராகி உள்ளது. நாளை வெளியாக உள்ள அப்டேட்டை எதிர்பார்த்து சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிறுத்தை சிவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியானது. இதில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார்.

வசூலில் சாதனை
கபாலி, காலா,பேட்ட, தர்பார் போன்ற திரைப்படங்களில் ஸ்டைலாக வந்த ரஜினி இந்த படத்தில் கிராமத்து இளைஞனாக வேஷ்டி சட்டையில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பல எதிர்மறையான கருத்துக்கள் வந்த போதிலும் வசூலில் சாதனை படைத்தது.

இயக்குவது யார்?
அண்ணாத்த படம் வெளியான நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார்? தயாரிப்பு நிறுவனம் யார்? என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்தன. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினி பேசியதாகவும், படம் நன்றாக இருந்தது என்று பாராட்டியதாகவும் இதனால், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, கே எஸ் ரவிக்குமார், நெல்சன் உட்பட பலருடைய பெயர்கள் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தலைவர் 169
இதையடுத்து, ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசை அமைப்பாளர் என்றும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்த முறையான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் கூறப்பட்டது.

நாளை தரமான அப்டேட்
இந்நிலையில், தலைவர் 169 திரைப்படம் குறித்த தரமான அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக இணையத்தில் தீயாக தகவல் பரவி வருகிறது. இதனை சூப்பர் ஸ்டாரின் ரசிகர் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர், இசையமைப்பாளர் தகவல் இணையத்தில் பரவி வருவதால் அது குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











