தலைவர் 174 படத்தை தயாரிக்கும் இன்பநிதி? ரஜினி, கமல் சம்பள விவரம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கவிருக்கும் படத்தை பற்றிய அப்டேட்டுகள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பரான அப்டேட் ஒன்று சினிமா வட்டாரத்தில் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஜெயிலர் 2' பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், சுராஜ், விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து தலைவர் 173 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முதலில் சுந்தர் ஜி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதை அடுத்து தலைவர் 173 படத்தை யார் இயக்குவார் என்ற கேள்விதான் அனைவரிடமும் இருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து, சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு என இயக்குநர்களின் பெயர் அடிபட்டுவந்தன. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தலைவர் 173 படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு: தலைவர் 173 படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் என சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் அவர்களது பொற்காலமான 1980களின் லுக்கில் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தலைவர் 174 படத்தின் சிறப்பு ப்ரோமோக்கான ஷூட்டிங் சத்தமே இல்லாமல் நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தலைவர் 174 மாஸ் அப்டேட்: இந்நிலையில் தலைவர் 174 திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. அதாவது, நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தை இன்பநிதி முக்கிய தயாரிப்பாளராகவும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணை தயாரிப்பாளராகவும் களம் வழங்க உள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவருக்கும் சம்பளத்திற்கு பதிலாக படத்தில் லாபத்தில் இருந்து பங்களிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











