18ம் தேதி துவங்கும் தளபதி 63 ஷூட்டிங்: விஜய் ரெடி, 16 கேர்ள்ஸும் ரெடி
சென்னை: தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு வரும் 20ம் தேதி துவங்குகிறது.
தெறி, மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களை அடுத்து அட்லி, விஜய் ஒன்று சேர்ந்துள்ள படம் தளபதி 63. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து படத்தை எடுக்கிறாராம் அட்லி. இதற்காக 16 புதுமுக பெண்களை தேர்வு செய்துள்ளார். அந்த 16 பேருக்கு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்
இந்நிலையில் படப்பிடிப்பு வரும் 20ம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி கமல் ஹாஸனின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை ஸ்போர்ட்ஸ் கோச்சாக பார்க்க ஆவலாக உள்ளது. சீக்கிரமாக படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணுங்க அட்லி. முக்கியமாக படப்பிடிப்பு நடக்கும்போது புகைப்படங்கள், வீடியோக்கள் எதுவும் கசிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தெறி, மெர்சலை போன்று இதுவும் நிச்சயம் ஹிட்டாகும் என்று விஜய் ரசிகர்கள் நம்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











