“தளபதி 66“ படப்பிடிப்பு நிறுத்தம்.. ஷாக்கான ரசிகர்கள்..காரணம் இதுதான் !

சென்னை : நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் கவுரவ வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 66

தளபதி 66

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 66' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில படங்கள் வெளியானதையடுத்து நடிகரின் தோற்றம் தெரியவந்தது. இதனால் தற்போது படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை தயாரிப்பாளர்கள் மாற்றியுள்ளனர்.

படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பு நிறுத்தம்

'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடைபெற்றுவந்தது. இதனால், அந்த பகுதியில் இருக்கும் மக்களின் மூலமாக விஜய்யின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. இதனால், படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்றி தனியாக செட் அமைக்கப்பட்டு வருகிறது.

தயாரிப்பாளருக்கு செலவு

தயாரிப்பாளருக்கு செலவு

செட் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டு வருகிறது. செட் அமைக்கும் பணி முடிந்தவுடன் மீண்டும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர் தில் ராஜூக்கு செலவு இருமடங்காக அதிகரித்துள்ளது.

விஜய் பிறந்த நாளில்

விஜய் பிறந்த நாளில்

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழியில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தெலுங்கில் வாரிசுடு என்றும், தமிழில் வாரிசு என்றும் பெயரிடப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆவலுடன் ரசிகர்கள்

ஆவலுடன் ரசிகர்கள்

மேலும், தளபதி 66 திரைப்படம் குடும்ப பின்னணி கொண்ட படமாக இத்திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இசையமைப்பாளர் தமன் முதன்முறையாக விஜய்யின் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறிது. சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதால், விஜய்யின் ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X