சூப்பர் காம்பினேஷனுடன் உருவாகும் தளபதி 67... விஜய் பிறந்தநாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
சென்னை : நடிகர் விஜய் தற்போது தனது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் மிகவும் பிசியாக காணப்படுகிறார். வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தனது பிறந்தநாளை வரும் ஜூன் 22ல் கொண்டாடவுள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் படத்திற்கு ரசிகர்கள் சூப்பர் ஆதரவு கொடுத்தனர். இதையடுத்து படம் எளிதாக 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. படம் சூப்பர் ஹிட் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

தளபதி 66 படம்
இதையடுத்து தற்போது தனது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் மும்முரமாக நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இவரது புஷ்பா படத்தின் வெற்றி விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. சமீபத்தில் படத்தின் பூஜையின்போது விஜய்யுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

குடும்ப சென்டிமெண்ட்
இந்தப் படத்தை இயக்கி வருகிறார் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பள்ளி. இந்தப்படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகி வருவதாக அவரும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தனர். மேலும் படத்தில் விஜய் படத்திற்கு தேவையான ஆக்ஷன், காமெடி என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

தளபதி 67ஐ இயக்கும் லோகேஷ்?
இந்நிலையில் விஜய்யின் அடுத்தப்படமான தளபதி 67 படத்தை அவரது மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் மீண்டும் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.

விஜய் பிறந்தநாளில் அறிவிப்பு
இந்நிலையில் தளபதி 67 படத்தை அவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வரும் ஜூன் 22ல் விஜய்யின் பிறந்தநாளின்போது வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் கேஜிஎப் 2 படத்தின் மிரட்டலான வில்லன் சஞ்சய் தத் வில்லனாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வித்தியாசமான கெட்டப்பில் விஜய்
மேலும் சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக லோகேஷ் கனகராஜின் படமாக அமையும் என்றும் வித்தியாசமான கெட்டப்பில் விஜய்யை பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
கடந்த ஆண்டில் விஜய்யின் பிறந்தநாளின்போது பீஸ்ட் படத்தின் டைட்டில் லுக் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியது. விஜய்யின் பிறந்தநாளை எப்போதுமே அவரது ரசிகர்கள் மாஸாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் தளபதி 67 குறித்த அறிவிப்பு அன்றைய தினம் வெளியாவது அவர்களுக்கு கண்டிப்பாக மாஸாகத்தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications











