Thalapathy 68: "இது விஜய்யா.. இல்ல அவரோட தம்பியா..?” வாவ்! தளபதி 68 லுக் சும்மா அள்ளுதே!!

சென்னை: லியோ படத்தைத் தொடர்ந்து தளபதி 68ல் நடித்து வருகிறார் விஜய்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

 Thalapathy 68 Vijays fanmade poster is trending now

தளபதி 68ல் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யின் போஸ்டர் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது.

ட்ரெண்டாகும் விஜய்யின் போஸ்டர்
விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. கடந்த மாதம் ரிலீஸான இந்தப் படம் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் தளபதி 68 படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தளபதி 68ல் விஜய்க்கு டபுள் ஆக்டிங் என சொல்லப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு பாத்திரங்களில் நடித்து வருகிறாராம். முன்னதாக லியோ ஷூட்டிங் முடிந்ததும் அமெரிக்கா சென்றிருந்தார் விஜய். தளபதி 68 படத்திற்கான கெட்டப் மாற்றுவதற்காக தான் விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்கா சென்றிருந்தனர்.

இதனால், தளபதி 68 படத்தில் விஜய்யின் லுக், கெட்டப், ஹேர் ஸ்டைல் எல்லாமே செம்மையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபுவும் விஜய்யின் லுக்கை இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக காட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில், விஜய்யின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் போஸ்டரில் விஜய்யின் கெட்டப்பை பார்த்து அவரது ரசிகர்களே ஷாக்காகியுள்ளனர்.

செம்ம ஸ்மார்ட்டான லுக், French Beard, குஷி படத்தில் நடித்த போது வைத்திருந்த ஹேர் ஸ்டைல், அட்டகாசமான கண்ணாடி என சயின்டிஸ்ட் மாதிரி கெத்து காட்டுகிறார். முக்கியமாக ரொம்பவே இளம் வயது தோற்றத்தில் கூல் & மாஸ்ஸாக காணப்படுகிறார் விஜய். இதுதான் தளபதி 68ல் விஜய்யின் கெட்டப்பா என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், இது ஃபேன்மேட் போஸ்டர் என்பது தெரியவந்துள்ளது.

ஆனாலும், விஜய்யின் இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் ஃபேன்மேட் போஸ்டரே இப்படி என்றால், ஒரிஜினல் எப்படி இருக்கும் எனவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், தளபதி 68 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்தை தொடர்ந்து துருக்கியில் நடைபெறவுள்ளது. இந்த அப்டேட்டை இயக்குநர் வெங்கட் பிரபுவே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X