விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தளபதி 69 பட ஷூட்டிங் எப்போ தொடங்குது தெரியுமா?

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் சூழலில் விஜய்யின் அடுத்த படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

Vijay Thalapathy 69 GOAT 69

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

செப்டம்பரில் ரிலீஸ்: கோட் படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது, இப்படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருவதால் இந்தப் படமும் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். முக்கியமாக மங்காத்தா படம் போல் இந்தப் படத்தையும் மெகா ஹிட்டாக கொடுப்பார் என்றும் பேசிக்கொள்கிறார்கள் அவர்கள்.

இரண்டு பாடல்கள்: படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசை என்பதாலும்; பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு அவர் இசையமைப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இதுவரை வெளியான இரண்டு பாடல்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கின்றன. இரண்டாவது பாடல் விஜய்யின் குரலில் மெலோடியாக வந்தாலும் அதுவும் பெரிதாக கவரவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

தளபதி 69 ஷூட்டிங்: இதற்கிடையே விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்குவதாக கூறப்படுகிறது. வினோத்தின் இந்தப் படம் விஜய்யின் அரசியல் களத்துக்கு நல்ல தளம் அமைத்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சமந்தா ஹீரோயினாக நடிக்கவிருந்ததாகவும்; பிறகு அவர் விலகிவிட்டார் என்றும் ஒரு தகவல் இடையில் ஓடுகிறது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தளபதி 69 படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வரும் என்றும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X