கருப்பு படத்தை மிஸ் பண்ணிட்டாரே விஜய்.. இந்நேரம் 1000 கோடி வசூல் வந்துருக்குமே கோலிவுட்டுக்கு!
சென்னை: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தை பார்த்த ஒவ்வொரு விஜய் ரசிகர்களின் கருத்தாகவும் இதுதான் உள்ளது. கருப்பு படத்தை வேண்டாம் என சொல்லிவிட்டு ஜனநாயகன் படத்தை விஜய் கையில் எடுத்துக் கொண்டாரே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
சட்டத்தில் உள்ள ஓட்டை முதல் சட்டசபையில் உள்ள ஓட்டை வரை அடைக்க மக்கள் போராட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பொய் பேசினால் வாய் கோணிக்கும் என்கிற காட்சிகளை எல்லாம் ஆர்ஜே பாலாஜி காட்டிய விதமும் அந்த சீனில் எல்லாம் சிஎம் விஜய் நடித்திருந்தால் இன்னைக்கு சீனே வேற எனக் கூறுகின்றனர்.

விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு ஆர்ஜே பாலாஜிக்குத் தான் முதலில் கிடைத்தது. ஆனால், விஜய் இந்த படத்தை எடுக்க டைம் எடுக்கும் என்பதால் ஜன நாயகன் படத்தை தேர்வு செய்ததாக தகவல்கள் வெளியாகின.
நீதிமன்றம் முதல் கோட்டை வரை: கோட்டு போட்டுக்கிட்டு கோர்ட்டுக்குள் கருப்பசாமியாக நுழைந்து கடைசியில் கோட்டை வரை செல்லும் அளவுக்கு படம் ஆரம்பத்தில் இருந்து எண்ட் கார்டு போடும் வரை காட் மோடில் பிளாஸ்ட்டாகவே உள்ளது. இப்படியொரு படத்தை தான் அன்பான ஃபேன்ஸ் முதல் தமிழ்நாட்டு ரசிகர்கள் ரொம்ப நாளாகவே சூர்யா நடிப்பில் பார்க்க நினைத்துக் கொண்டிருந்தனர். அதனை கச்சிதமாக ஆர்ஜே பாலாஜி எடுத்து ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளார்.
விஜய் நடித்திருந்தால்: ஜன நாயகன் படத்தை போல விஜய் நடித்திருந்தால் கருப்பு படத்தைக் கூட தேர்தல் முடியும் வரை ரிலீஸ் செய்ய விட்டுருக்கமாட்டாங்க. ஆனால், முதலமைச்சர் ஆன பிறகு கருப்பு படம் வெளியாகி இருந்தால் கோலிவுட்டின் முதல் 1000 கோடி படமாக கருப்பு படம் இருந்திருக்கும் என தியேட்டரில் படம் பார்த்த தளபதி ரசிகர்கள் வருத்தத்துடன் கூறிச்சென்றதை பார்க்க முடிகிறது. கருப்பு படத்தை விஜய் மிஸ் செய்தாலும் தமிழ்நாட்டுக்கு இப்போ ரியல் கருப்பசாமியாகவே கோட் மாட்டிக்கொண்டு கோட்டைக்குள் சென்றிருக்கிறார் என்றும் சிஎம் விஜய் கண்டிப்பாக தமிழ்நாட்டை மாற்றிக்காட்டுவார் என நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஜனநாயகன் சம்பவம் பண்ணும்: கருப்பு படம் மட்டுமின்றி கருப்பு படத்தைத் தொடர்ந்து ஜூன் 18ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் திரைப்படம் வெளியானாலும் பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் பண்ணும் என்றே விஜய் ரசிகர்கள் கருத்தாக உள்ளது. கருப்பு திரைப்படம் சூர்யாவுக்கு மெகா பாக்ஸ் ஆபீஸ் படமாக மாற வேண்டும் என்றும் ரசிகர்கள் ஓடிடியில் வரும் வரை வெயிட் பண்ணாமல் தியேட்டருக்குப் போய் கருப்பசாமியை கொண்டாடுங்கள் என்றே கூறுகின்றனர். சென்னையை தாண்டி தமிழ்நாட்டின் பட்டித் தொட்டி எங்கும் கருப்பு படம் கலெக்ஷனை அள்ளும் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications