பாசத்துக்கு தத்துப்புள்ள தளபதிடா.. கொரோனா நிதி.. ரசிகர்களுக்கும் வாரி கொடுத்துருக்காரு விஜய்!

சென்னை: கொரோனா நிதியாக 1.30 கோடி ரூபாயை நடிகர் விஜய் சமீபத்தில் வழங்கிய நிலையில், தனது ரசிகர்களுக்கும் விஜய் நிதியுதவி செய்த விசயம் வைரலாகி வருகிறது.

Recommended Video

அஜித், ரஜினி ரசிகர்களுக்கு வயிறு இல்லையா? Thalapathy Vijay Politics

வரும் மே 3ம் தேதியுடன் இந்த லாக்டவுன் நிறுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருந்தாலும், கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் கட்டுக்குள் வருவதாகவே தெரியவில்லை.

நீட்டிக்கப்படுமா

நீட்டிக்கப்படுமா

தமிழ் நாட்டில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாகவே சென்னை மாறி இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே போவதால் சாமானியர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி போயுள்ளது. மேலும், சில வாரங்களுக்கு லாக் டவுன் நீட்டிக்கப்பட்டால் பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்.

பிரபலங்கள் நிதியுதவி

பிரபலங்கள் நிதியுதவி

கொரோனாவால் பல லட்சம் குடும்பங்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருக்கின்றன. பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் தாராளமாக கொரோனா நிதி அளித்தால், அவர்களின் பசியாற அரசு நடவடிக்கை எடுக்க அந்த பணம் உதவியாக இருக்கும் என்பதால், பல பிரபலங்களும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

விஜய் நிதியுதவி

விஜய் நிதியுதவி

ரஜினிகாந்த் முதல் ஹரிஷ் கல்யாண் வரை பல நடிகர்களும் கொரோனா நிதி அளித்த நிலையில், கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் நடிகர்களான அஜித், விஜய் அமைதி காத்து வந்ததாக செய்திகள் வெளியாகின. நடிகர் அஜித் கொரோனா நிதியாக 1.25 கோடி அறிவித்தார். அதன் பின்னர் நடிகர் விஜய் 1.30 கோடி நிதியை மத்திய, மாநில அரசுகளுக்கும், ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி அரசுகளுக்கும் என பிரித்துக் கொடுத்தார்.

ரசிகர்களுக்கும்

ரசிகர்களுக்கும்

இந்நிலையில், நடிகர் விஜய் கொரோனா பாதிப்பால் வேலை இழந்து தவிக்கும் தனது ரசிகர்களுக்கும் நிவாரண நிதி வழங்கியுள்ள விசயம் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு ரசிகர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 லட்சம் ரூபாய் வரை தனது ரசிகர்களுக்கும் நிவாரண நிதி வழங்கியுள்ள நடிகர் விஜய்யின் தாராள மனசை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்கள் நன்றி

ரசிகர்கள் நன்றி

சினிமா தொழிலாளர்கள், பிரதமர் நிவாரண நிதி, மாநில அரசுகளுக்கு நிவாரண நிதி என பிரித்துக் கொடுத்த நடிகர் விஜய், தனது ரசிகர்கள் துயர் துடைக்கும் வகையில், ரூ. 50 லட்சம் ரூபாய் அளவுக்கு உதவி செய்துள்ள நிலையில், அந்த உதவியை பெற்ற ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும், தளபதி விஜய்க்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து பதிவுகளும், வள்ளல் விஜய் என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பான் இந்தியா

பான் இந்தியா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அன்று மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X