தலைநகர் டெல்லியில் ஷாப்பிங் செய்த தளபதி விஜய்.. வெறித்தனமாக வைரலாகும் ரசிகர் எடுத்த வீடியோ!
சென்னை: டெல்லி விமான நிலையத்தை தொடர்ந்து டெல்லியில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் நடிகர் விஜய் ஷாப்பிங் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
தளபதி விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

தளபதியின் பீஸ்ட்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைபப்டம் மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில், தளபதி விஜய்யின் அடுத்த படமான பீஸ்ட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பூஜா ஹெக்டே ஜோடி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படம் ஹிட் அடித்த நிலையில், பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்ததாக பிரபாஸின் ராதே ஷ்யாம் வெளியாக காத்திருக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யின் பீஸ்ட் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்க உள்ளார் இந்த புட்டபொம்மா.

வாத்தி ஷாப்பிங்
வாத்தி ரெய்டை பார்த்து அசந்து போன ரசிகர்களுக்கு வாத்தி விஜய்யின் ஷாப்பிங் வீடியோ தற்போது வெளியாகி உற்சாகத்தை அளித்துள்ளது. டெல்லியில் உள்ள DLF புரமனேட் மாலில் சமீபத்தில் விஜய் ஷாப்பிங் செய்யும் போது அவரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் விஜய்
சமீபத்தில், பீஸ்ட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் பறந்து சென்ற நிலையில், டெல்லி விமான நிலையத்தில் நடிகர் விஜய் வெளியேறும் போது ரசிகர்கள் க்ளிக்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

டாக்டருக்கு வெயிட்டிங்
டாக்டர் படத்தின் டிரைலர் வெளியாகி மிரட்டி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் தான் அந்த படத்திற்கு வெறித்தனமாக காத்திருப்பதாக ஏகப்பட்ட மீம்கள் குவிந்து வருகின்றன. நெல்சன் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் நிலையில், டாக்டர் படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்த்து பீஸ்ட் பட ரிலீசுக்கு வெறியேற்ற தயாராகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











