Thalapathy Vijay: எல்லாம் புரியுது.. ஒன் லாஸ்ட் டைம்னு நினைக்கும்போது கண்ணு கலங்குதே தளபதி..என்ன செய்ய?

சென்னை: சரி, இதுதான் சரியான நேரம் என்று நாம் எல்லோரும் சொல்வதைக் காட்டிலும், விஜயே சொல்லிவிட்டார். ஒன் லாஸ்ட் டைம், 33 வருசமா எனக்காக நின்ற உங்களுக்காக அடுத்த 30, 33 வருசமா நிற்கப் போகிறேன் என்று பேசியது எல்லாம் ரசிகர்களுக்கு எமோஷனலின் உச்சம். விஜயின் அரசியல் என்ட்ரி ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்கள் இருந்தாலும் சினிமாவில் இருந்து அவர் விலகுவது மொத்த ரசிகர்கள் பட்டாளத்திற்கும் வருத்தம் தான்.

ஜன நாயகன் படத்தின் அறிவிப்பு வெளியானதுமே படக்குழு அறிவித்தது, ஒன் லாஸ்ட் டான்ஸ், ஒன் லாஸ்ட் டைம் என்று. இந்த அறிவிப்பே ரசிகர்களின் மனதில் இடியை இறக்கியது போல ஆகிவிட்டது. இணையம் தொடங்கி, அவரை நேரில் சந்தித்து கல்வி உதவித் தொகை வாங்கிக் கொண்ட மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் வரை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது படத்தில் நடியுங்கள் தளபதி என்று கோரிக்கை வைத்தனர்.

"என் நெஞ்சில் குடியிருக்கும், என்ன நண்பா, என்ன நண்பி, ஒரு குட்டிக் கதை சொல்லட்டுமா" என தனது பேச்சு தொடங்கியதில் இருந்து, ரசிகர்களை மெஸ்மரைஸ் செய்யும் தளபதியின் குட்டிக் குட்டி ரியாக்‌ஷனகள் எல்லாம், ரசிகர்கள் மனதில் சேகரித்து வைக்கும் தளபதியின் நினைவுகள். வணிக ரீதியாக அவர் பெரிய ஸ்டார், முதல் இடத்தில் இருக்கிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கும் தளபதி விஜய்க்கும் இடையில் தான் போட்டியே என்ற விவாதத்திற்குள் எல்லாம் செல்லவே வேண்டாம்.

Thalapathy Vijay Fans Emotional Outcomes After Jana Nayagan Audio Launch As His One Last Time - Original
Photo Credit:

தளபதி: இவை அனைத்தையும் கடந்தது தளபதி மீது இருக்கக் கூடிய பாசமும், அன்பும். என்னதான் மற்ற நடிகர்களின் படங்களை திரையில் பார்த்தாலும், தளபதியை பெரிய திரையில் பார்க்கும்போது சரி, கையில் வைத்திருக்கும் மொபைலில் தளபதியின் முகத்தைப் பார்க்கும் போதும் சரி, வருகிற ஆனந்தமும் ஏற்படுத்துகிற உற்சாகமும் வேறு எதிலும் கிடைப்பது இல்லை. உலகம் முழுவதும் தமிழ் மொழியைக் கடந்து மாற்று மொழியை சேர்ந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள தளபதி, தனது அரசியல் கட்சிக்காக எடுத்த முடிவு உண்மையிலேயே மிகப்பெரிய முடிவுதான்.

வாழ்க்கை பாடம்: அதற்காக அவர் கொடுக்கும் விலை என்பது வேறு எதனாலும் கொண்டு நிரப்ப முடியாத விலையைக் கொடுக்கிறார். தளபதி தனது திரை வாழ்க்கையிலேயே ரசிகர்களுக்கு பல நேரங்களில் வாழ்க்கைப் பாடத்தை நடத்தி விட்டார். படங்கள் வெளியாகும் போது ஏற்படும் நெருக்கடிகள் தொடங்கி, அவரது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை மோசமாக விமர்சிக்கும் போதும் அவற்றையும் எதிர் கொண்டு, அவர் சொன்ன நதி குட்டி கதை போல, தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

Take a Poll

அரசியல் - திரை: அரசியல் மேடைகளில் விஜயைப் பார்க்கலாம் தான் என்றாலும், அது திரையில் விஜயைப் பார்க்கும் ஏற்படுத்தும் உணர்வை ஏற்படுத்துவதில்லை. அரசியல் மேடையில் அவரை நோக்கி பல கேள்விகளை கேட்க வைக்கிறது அவரது நடவடிக்கைகள். ஆனால் திரை வாழ்க்கையில் நீங்கள் இனி இருக்கப் போவதில்லை என்பதை புரிந்து கொண்டாலும், கண் கலங்குவதை தடுக்க முடியவில்லையே தளபதி என்று கூறும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

Thalapathy Vijay Fans Emotional Outcomes After Jana Nayagan Audio Launch As His One Last Time - Original
Photo Credit:

ஒன் லாஸ்ட் டைம்: ஒன் லாஸ்ட் டைம் என்பது உங்களுக்கு மட்டும் இல்லை தளபதி, அது உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் தான். பல பிரச்னைகளுடன் வாழ்க்கை எதிர் கொண்டு வரும் ரசிகர்கள் ஒரு 200 ரூபாயில் தனது வாழ்க்கையின் மொத்த சோகத்தையும் வெளியே விட்டுவிட்டு, திரையரங்கிற்குள் திருவிழா போல, ஆடிப் பாடி, உணர்ச்சிகளைக் கொட்டுவதும் ஜன நாயகனோடு லாஸ்ட் டைமாக இருக்கப்போகிறது என்பதும் நடைமுறை உண்மைதான் என்றாலும், ஒரு ரசிகராக என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம் தளபதி என்று சொல்லும் ரசிகர்கள் எக்கச்சக்கம். மிஸ் யூ தளபதி!..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X