பெற்றோரை சந்தித்த விஜய்… எஸ்.ஏ.சி முகத்தில் சிரிப்பை பாருங்க.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய், கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அரசியலிலும் என்ட்ரி கொடுத்து இருக்கும் இவர், கைவசம் உள்ள படத்தை முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார். தற்போது இவர் அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்த விஜய், லவ்வர் பாய், ஆக்‌ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்து தனது திறமையால் வளர்ந்து இன்று ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற நிலையை எட்டியுள்ளார். இவர் தனது அப்பாவின் தயவில் தான் சினிமாவிற்கு வந்தார் என்ற பேச்சு எழுந்தாலும், திறமை இல்லாமல் அந்த உச்சத்தையும் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க முடியாது.

Thalapathy Vijay meets parents photos trending on social media

மக்கள் இயக்கம்: அவ்வப்போது அரசியல் கருத்தை இசை வெளியீட்டு விழாவில் பேசி வந்த விஜய், தனது ரசிகர் மன்றத்தை 2009ஆம் ஆண்டு மக்கள் இயக்கமாக மாற்றினார். அந்த வகையில், அடிக்கடி இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து வந்த விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

அரசியல் கட்சி: இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும், 2026ஆம் ஆண்டு தேர்தலே தனது இலக்கு என்றார். தீவிர அரசியலுக்கு பின் சினிமாவில் இருந்து விலகுவேன் என அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

மகிழ்ச்சியில் எஸ்.ஏ.சி: இந்நிலையில், நடிகர் விஜய், அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருடன் எடுத்துக்கொண்ட போட்டோஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த போட்டோவில் விஜய், அப்பாவின் தோளில் கை போட்டுக்கொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளார். அப்பாவிற்கும் மகனுக்கும் மனக்கசப்பு இருக்கும் நிலையில், அந்த போட்டோவில் எஸ்.ஏ.சந்திரசேகர் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

சாய்பாபா கோவில்: அண்மையில் நடிகர் விஜய் சென்னையில் தனது அம்மாவின் இஷ்ட கடவுளான சாய் பாபாவிற்கு கோவில் கட்டினார். 8 கிரவுண்ட் நிலத்தில் தனது அம்மாவிற்காக சாய் பாபா கோயிலை கட்டிக் கொடுத்துள்ளார். இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஃபிப்ரவரி மாதம் நடைபெற்றது. அந்த கும்பாபிஷேகத்தில் நடிகர் விஜய் தனது அம்மாவுடன் கலந்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X