29 வருட சினிமா பீஸ்ட்.. வைரலாகும் தளபதி விஜய்யின் செம கேஷுவல் க்ளிக்.. கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் 29 வருடத்தை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் கொண்டாடி வருகின்றனர்.
#29YrsOfVIJAYSupremacy என்ற ஹாஷ்டேக் போட்டு விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட காமன் டிபிக்களை வித விதமாக உருவாக்கி தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் செம கேஷுவல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

29 வருட சினிமா பீஸ்ட்
நடிகர் விஜய் தனது 10 வயதிலேயே விஜயகாந்தின் வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால், அவர் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்தில் இருந்தே அவரது சினிமா வாழ்க்கை கணக்கிடப்பட்டு 29 வருட விஜயிஸம் என ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

வசூல் மாஸ்டர்
கோலிவுட் சினிமாவில் வசூல் மாஸ்டராக ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். 100 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாகவும் நடிகர் விஜய் தனது உழைப்பால் உயர்ந்துள்ளார்.

செம கூல்
சுற்றுலா சென்ற இடத்தில் நதி அருகே எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படத்தை விஜய் தரப்பு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்காக ஷேர் செய்ய 29வது ஆண்டு விஜய்யின் திரைப்பயண திருவிழா மேலும் சிறப்பாக மாறி உள்ளது. செம கூலாக படு கேஷுவலாக தளபதி விஜய் இந்த புகைப்படத்தில் காட்சியளிக்கிறார்.

பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள்
அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் தளபதி விஜய்யின் குரலில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெகு விரைவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகி இணையத்தை தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் குஷி
இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக கோலோச்சி வரும் நடிகர் விஜய் அடுத்ததாக பீஸ்ட், தளபதி 66, லோகேஷ் கனராஜ் உடன் ஒரு படம், மீண்டும் அட்லி இயக்கத்தில் ஒரு படம் என பெரிய லைன் அப்பே சொல்லப் படும் அளவுக்கு ரசிகர்களின் தளபதியாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் குஷியில் அவரது திரைப்பயணம் மேலும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











