விஜய் செய்த பிராங்க்.. சிம்பு பெயரை எல்லாம் இழுத்து விட்ருக்காரு.. தளபதியின் அறியாத பக்கங்கள் பாருங்க
சென்னை: அரசியல் கட்சி தலைவராக மாறியிருக்கும் விஜய் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை தனித்து சந்தித்துவிட்டார். நாளை மறுதினம் தேர்தல் முடிவுகள் வரவிருக்கின்றன. அதுமட்டுமின்றி இந்த மாதத்துக்குள்ளேயே ஜனநாயகன் படமும் ரிலீஸாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. சூழல் இப்படி இருக்க விஜய் பற்றி அறியாத பக்கங்களை இதில் பார்க்கலாம் வாங்க.
நடிகராக தனது தடத்தை வீரியமாக பதித்த விஜய்; அரசியலுக்கு வந்திருக்கிறார். தவெக கட்சியை ஆரம்பித்து திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்து; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை தனித்தும் சந்தித்துவிட்டார். அவர் மட்டும் இரண்டு தொகுதிகளில் களமிறங்கியிருக்கிறார். ஏதேனும் ஒரு தொகுதியிலேனும் வெற்றி பெற்றுவிடுவார் என்று தொண்டர்களும், ரசிகர்களும் நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இன்னும் சிலரோ; அமையவிருப்பதே தவெக ஆட்சிதான் என்று ஓபனாக சொல்கிறார்கள்.

சாதகமாக இல்லை: ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாம் வேறு மாதிரி வந்திருக்கின்றன. பெரும்பாலும் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்திருக்கிறது. இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்களின் எக்ஸிட் போல் தவெகவுக்கு ஆதரவாக அமைந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி இத்தனை நாட்கள் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்கிற தொனியில் பேசிய வைகோ, திருமாவளவன் எல்லாம் சில நாட்களாக பேச்சை மாற்றியிருக்கிறார்கள். விஜய் பெரிய தாக்கத்தை உண்டு செய்வார் என்பது அவர்களது நிலைப்பாடு.
விஜய்யின் மைண்ட் செட்: விஜய்யின் மைண்ட் செட்டை பொறுத்தவரை ரொம்பவே உற்சாகமாக இருக்கிறாராம். ஆட்சியை பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி; வாக்கு சதவீதத்தில் யாரும் எதிர்பார்க்காத விஷயம் நடக்கவிருக்கிறது என்றும்; தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் தான் கிங் மேக்கராக மாறிவிடலாம் என்றும் அதீத நம்பிக்கையில் இருக்கிறாராம். மேலும் சங்கீதா விஷயத்திலும் க்ளியரான முடிவை எடுத்துவிட்ட அவர்; கேட்கும் ஜீவனாம்சத்தை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளலாம் என முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது.
தளபதியின் அறியாத பக்கங்கள்: விஜய்யை பொறுத்தவரை அவர் ரொம்பவே சைலெண்ட்டாகத்தான் திரைத்துறையில் இருந்தபோது வெளியே தெரிந்தார். ஆனால் அவர் அரசியல் மேடைகளில் ஏறி பேசியதை பார்த்து அவருடன் பணிபுரிந்தவர்களே ஆச்சரியப்பட்டு போனார்கள். விஜய் இவ்வளவும், இப்படியும் பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றுதான் சொன்னார்கள். அதேசமயம் விஜய் முழுக்க முழுக்க சைலெண்ட் கிடையாது; தனக்கு நெருங்கிய வட்டத்திடம் ரொம்பவே ஃப்ரீயாக இருப்பார் என்றும் சில சம்பவங்கள் வெளியாகியிருக்கின்றன.
ரத்னகுமார் பேட்டி: இந்நிலையில் 29 பட இயக்குநர் ரத்னகுமார் தனியார் யூடியூப் சேனலுக்கு பேசுகையில், "எனது ஒரு பிறந்தநாளுக்கு விஜய் எனக்கு ஃபோன் செய்து பிராங்க் செய்தார். அப்போது அவர் என்னிடம் லோகேஷ் கனகராஜ் மாதிரி பேசி, 'மச்சி ஹாப்பி பர்த்டே' என்று சொன்னார். முதலில் அது எனக்கு யார் என்று புரியவில்லை. கொஞ்ச நேரத்தில் அது லோகேஷ் இல்லையென்றும்; விஜய்தான் என்றும் புரிந்தது. உடனே நான், 'சார்' என்று சொன்னேன். லோகேஷ் உங்களிடம் பேசுவார் என்று கேட்டுக்கொண்டு அதுமாதிரி இமிட்டேட் செய்ததாக சொன்னார். அதேமாதிரி இன்னொரு நாள், 'நாங்கள் சிம்பு ஆஃபிஸிலிருந்து பேசுகிறோம். கதை ஏதாவது வைத்திருக்கிறீர்களா?' என கேட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications
