மனைவி போட்ட ரூலை மீறிய தளபதி... நீங்களே இப்படி பண்ணலாமா என்று கேட்கும் ரசிகர்கள் !
சென்னை : நடிகர் விஜய்யின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அவரது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
எப்போதும் அமைதியாக இருக்கும் விஜய் இந்த வீடியோவில் வேடிக்கையாக பேசி இருக்கிறார்.
இதனால், இந்த வீடியோவை தளபதியின் விஸ்வாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

பிரம்மாண்டமான வெற்றி
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில், இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் இன்று வரை இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ள பாடலாகவே இருக்கிறது.

நெல்சன் திலீப் குமார்
நெல்சன் திலீப் குமார் இயக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புசென்னையில்உள்ள தனியார் அரங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பணிபுரியும் நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பிறகு படப்பிடிப்புதொடங்கப்பட்டது.

மீறிய விஜய்
இந்நிலையில் நடிகர் விஜய் குறித்த சுவாரசியமான வீடியோ பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் விஜய் சாப்பிட்டுக்கொண்டே பேசுகிறார். எனக்கு அசைவ உணவுதாங்க ரொம்ப பிடிக்கும், கொஞ்சநாளா வீட்டுல செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் சைவ உணவுத்தான் சாப்டனும்னு ரூல் போட்டாங்க.... அந்த இரண்டு நாள் மட்டும் நாள் ஷூட்டிங்கில சாப்பிட்டுவிடுவேன் என்று கூலாக கூறுகிறார் விஜய். நகைச்சுவையாக உள்ள இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Recommended Video

வைரலாகிறது
விஜய் படங்களில் கலகலப்பாக, துடிப்பாக நடித்தாலும் இயல்பாகவே அவர் அதிகம் பேசமாட்டார் எப்போதும் அமைதியாகவே இருப்பார். படப்பிடிப்புத் தளத்திலும் அமைதியாகவே இருப்பார் என்று பலரும் பல போட்டியின் போது கூறியுள்ளனர். தற்போது, விஜய் நகைச்சுவையாக பேசிய வீடியோ வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதை பார்த்து அண்ணே நீங்களே இப்படி பண்ணலாமா என்று நகைச்சுவையாக அவரை கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











