Ajith - ஒருத்தர் மாதிரி ஒருத்தர் இருக்கணுமா.. அவர் எதையோ இழந்திருக்கார்.. அஜித் பற்றி மூத்த நடிகர் ஷேரிங்ஸ்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக அதே உற்சாகத்தோடு அடுத்த படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அவர். தடையறத்தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கிவருகிறார். திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் கமிட்டாகியிருக்கின்றனர். அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி ரொம்பவே மும்முரமாக நடந்துவருகிறது. அஜித்தும் முழு ஒத்துழைப்பை கொடுத்துவருகிறார்.

Thambi Ramaiah Shares abotu Actor Ajithkumar at Recent interview

என்ன கதை?: இப்படத்தில் அஜித்தும், திரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும்; அவர்கள் இருவரும் ஒரு வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்வார்கள் அப்போது திரிஷா கடத்தப்பட்டுவிடுவார். அவரை அஜித் மீட்பதுதான் ஒன்லைன் என்கிறார்கள் கோலிவுட்டினர். மகிழ் திருமேனி திரைக்கதை அமைப்பதில் கில்லாடி என்பதால் கண்டிப்பாக பக்கா ஆக்‌ஷன் படம் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரெடி என்று இப்போதே கூறிவருகிறார்கள் அஜித்தின் ரசிகர்கள்.

ஒதுங்கும் அஜித்: இதற்கிடையே அஜித் படத்தின் ஷூட்டிங்கிலிருந்து குட்டி பிரேக் எடுத்தார். அந்த சமயத்தில்தான் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு அஜித்குமார் வரவில்லை. மேலும் இரங்கல் தெரிவித்து ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. இது பலரிடம் கண்டனத்தை பெற்றுவருகிறது. இந்நிலையில் அஜித்துடன் சேர்ந்து வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த தம்பி ராமையா அஜித் குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தம்பி ராமையா பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "அஜித்துடன் எனக்கு நெருக்கம் இருக்கிறது என்பதால் என்னை பார்ப்பவர்கள் பலர் அஜித்தை கேட்டதாக சொல்லுங்கள் என்பார்கள். அஜித்தின் பயணம் சற்று வித்தியாசமானது. நிலவில் போய் கால் வைத்த பிறகு அங்கு தங்க முடியாது. கீழே வந்துவிட வேண்டும். இருந்தாலும் அங்கேயே அவர் இருக்கிறார் என்றால் அவரை தூக்கிக்கொண்டு போனது ராக்கெட். அவராகவே போயிருந்தால் ஒருநாள் கீழே வந்துவிடலாம். ஆனால் கொண்டு போனது ராக்கெட் அல்லவா. அதனால்தான் அதே இடத்தில் பத்து வருடமாக இருக்கிறார்.

இழந்திருக்கிறார்: அஜித் எதையோ இழந்திருக்கிறார். அதுவும் பெரிதாக இழந்திருக்கிறார். மிகவும் தனித்துவம் கொண்ட மனிதர் அவர். ஒருவர் மாதிரியே இன்னொருவர் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இத்தனை புகழையும் அவர் அடைகாத்துக்கொண்டிருக்கிறார். ரசிகர் மன்றமே வேண்டாம் என்று சொல்லியும் அவருக்கு வெறிப்பிடித்த ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர் ஒரு தனித்துவமானவர்தானே.

உயர்ந்த மனிதர்: தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக்கூடிய நடிகர் அவர். உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்றால் அவர் உயர்ந்தவர்தான். அந்த இடத்தூக்கு அவர் சாதாரணமாக போயிருக்கக்கூடாது. அமராவதியில் இருந்து விடாமுயற்சிவரை அவர் பல மேடு பள்ளங்களை கடந்து போயிருக்கிறார். அதற்கு அவர் எடுத்துக்கொண்டது விடாமுயற்சி மட்டும்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X