தனுஷ் சாருக்கு நன்றி.. அமரன் வெற்றிக்குப் பிறகும் இந்த அடக்கம் தான் சூப்பர்.. சிவகார்த்திகேயன் செம!
சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியானது. கமல்ஹாசன் தயாரிப்பில் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 185 கோடி வசூலை அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வார இறுதியில் 200 கோடி வசூலை அமரன் திரைப்படம் அள்ளும் என்கின்றனர். இதுவரை 100 கோடி நாயகனாக இருந்த சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் மூலமாக 200 கோடி நாயகனாக மாற உள்ளார்.

ஆனாலும், எந்த ஒரு நடிகருடனும் போட்டிக்குப் போகக் கூடாது என்றும் பெரிய வசூலை ஈட்டிய கர்வத்தால் மற்ற முன்னணி நடிகர்களை தாழ்த்தி பேசுவதோ கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ள சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷுக்கு நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நன்றி தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாராட்டுகளும் சர்ச்சைகளும்: அமரன் திரைப்படத்தை ஒரு பக்கம் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் கொண்டாடி வரும் நிலையில், இன்னொரு பக்கம் அமரன் படத்திற்கு எதிரான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கிளம்பிய அதே எதிர்ப்புகள் தற்போது அமரன் படத்துக்கும் எழுந்துள்ளன. மேலும், அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் அவர் பிராமணர் என்பதை ஏன் சுட்டிக்காட்டவில்லை என எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இயக்குநர் விளக்கம்: மேஜர் முகுந்த் பிராமணராக இருந்தாலும் அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கிறிஸ்தவப் பெண்ணை அப்போதே அவர் சாதி மதங்களை கடந்து விட்டார் என்பது தெளிவாகிறது. மேலும், முகுந்தின் பெற்றோர்கள் தனது மகனை தமிழன் என்றும் இந்தியன் என்றும் காட்டினால் மட்டுமே போதும் என்று கேட்டுக் கொண்டனர் என அழுத்தம் திருத்தமாக பிராமணராக ஏன் காட்டவில்லை என்கிற பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தி புரமோஷன்: அமரன் படம் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தி ரசிகர்கள் மத்தியில் அந்த படத்தை புரமோட் செய்ய வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பிரஸ்மீட் ஒன்றில் கலந்துக் கொண்டனர். அப்போது, கேட்கக்பட்ட ஒரு கேள்விக்கு நடிகர் தனுஷுக்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
தனுஷுக்கு நன்றி: எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற ”பூமி என்ன சுத்துதே” பாடலில் “ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்” என்கிற வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என ஒருவர் எழுந்து சொல்ல, அந்த பாடலை பாடிய சிவகார்த்திகேயன், அந்த பாடலை தனக்கு எழுதிக் கொடுத்த தனுஷ் சாருக்கு நன்றி எனக் கூறினார். தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து சிவகார்த்திகேயனை பாராட்டி வருகின்றனர். தனுஷை வசூல் ரீதியாக சிவகார்த்திகேயன் முந்தினாலும் தலைக்கனம் இல்லாமல் இருப்பதே சிறப்பு எனக் கூறுகின்றனர். தனுஷின் குபேரா மற்றும் இட்லி கடை உள்ளிட்ட படங்கள் அமரன் படத்தை விட அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











