விஜய் தங்கம் மாறி இருந்தாரு.. என் நெஞ்சில் குடியிருக்கும் தளபதியே.. நண்டு சிண்டெல்லாம் பிரச்சாரம்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந் தேதி வர இருக்கும் நிலைகள் அரசியல் களம் சூடு பிடித்து உள்ளது. விஜய் செல்லும் இடம் எல்லாம் ரசிகர்களின் கூட்டமும், தொண்டர்களின் கூட்டமும் அவரை சூழ்ந்து கொண்டு வருகின்றன. இதனால் அவர் செல்லும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் குதிக்க இருக்கிறார். அவர் நடித்த 'ஜனநாயகம்' திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. படம் தேர்தலுக்குப் பிறகு ஏப்ரல் 30-ஆம் தேதி அல்லது ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. இதில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

Vijay TVK leader campaign

தளபதி விஜய்: பெரம்பூர் தொகுதியில் மனுத்தாக்கல் செய்த விஜய் பெரம்பூர், கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். வில்லிவாக்கம் தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் கூட்டம், விஜயின் பிரச்சார வாகனத்தை சூழ்ந்து கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு,பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி காரில் புறப்பட்டு சென்றார். விஜய் இன்று வில்லிவாக்கம் ,அண்ணா நகர், தி நகர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

சிறுவன் பிரச்சாரம்: விஜய்க்கு இளம் வாக்காளர்களிடம் செல்வாக்கு மிக அதிகமாக உள்ளது என்பது நமக்கு தெரிந்து இருந்தாலும் தற்போது தேர்தல் களத்தில் நண்டு சிண்டேல்லாம் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதை பார்க்க முடிகிறது. விஜயின் பிரச்சாரத்தை பார்த்த சிறுவன் ஒருவன், விஜய் தங்கம் மாறி இருந்தாரு என்று சொல்லிவிட்டு விஜய் பேசுவது போல என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களே... இரண்டே ரெண்டு அணிக்கு தான் போட்டியே ஒன்று திமுக மற்றொன்று டிவிகே என பேசி உள்ளார். அந்த சிறுவன் பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X