ரத்தம் சொட்ட சொட்ட… காயத்துடன் அஜித் சொன்ன அந்த வார்த்தை… நெகிழ்ந்து போன படக்குழு!

சென்னை : வலிமை படத்தில் ஆபத்தான காட்சியின் போது அஜித் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அந்த நேரத்திலும் அவர் சொன்ன வார்த்தை படக்குழுவினரை நெகிழ வைத்துள்ளது.

வலிமை படம் 10 நாட்களில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

வலிமை படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே சண்டை சாட்சிகளும், பைக் ரேசும் தான், இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் பணியாற்றி இருந்தார்.

வலிமை

வலிமை

அஜித் குமாரின் 60வது திரைப்படமான வலிமை, கடந்த 24ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்திருந்தார். மேலும், யோகிபாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

கீழே விழுந்த அஜித்

கீழே விழுந்த அஜித்

வலிமை படத்தில் பிரம்மாண்ட சண்டை காட்சிகளும், ஹாலிவுட் தரத்திற்கு பைக் ரேஸ்கள் படத்தின் சுவாரசியத்தை கூட்டி உள்ளன. இதை அஜித்தின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார். படம் ரிலீஸுக்கு முன்பே, அஜித் பைக் ரேசிங்கின் போது கீழே விழுந்த காட்சி வெளியாகி இருந்தது. இதில் வீலை தூக்கியபடி அதிவேகத்தில் செல்ல, நிலை தடுமாறிய அஜித், சாலையில் விழுந்தார். இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் பதைபதைத்தனர். ஆனால், சிறிய சிராய்ப்புதான் என அப்போது கூறப்பட்டது.

ரத்தம் சொட்ட சொட்ட

ரத்தம் சொட்ட சொட்ட

ஆனால், தற்போது அந்த விபத்து புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த புகைப்படத்தில், கையில் ரத்தம் சொட்டுகிறது, பேண்ட் கிழிந்து காயம் ஏற்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட போது ஆபத்தான இந்த காட்சியை டூப் போட்டு எடுத்து இருக்கலாம் என்று படக்குழுவினர் அஜித்திடம் சொன்னார்களாம்.

Recommended Video

வலிமை படப்பிடிப்பில் காயமடைந்த தல அஜித் | என்ன நடந்தது? | Filmibeat Tamil
அஜித்தின் இளகிய மனம்

அஜித்தின் இளகிய மனம்

கையில் ரத்தம் சொட்டிக்கொண்டு இருந்த அந்த நேரத்திலும், டூப் போடுபவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு அடிபட்டால் வலிக்காதா என அஜித் கேட்டுள்ளார். இதைக்கேட்ட படக்குழுவினர் இவரின் இளகிய மனதைப் பார்த்து பூரித்துப் போனார்களாம். அஜித் காயமடைந்த புகைப்படம் வைரலாகி வரும் இந்த நேரத்தில் இந்த தகவலும் இணையத்தில் டிரெண்டாகி அஜித் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X