என்னது நாங்க போக முடியாதா?.. ஊர்லையே இருக்கமாட்ட.. மலேசிய ரவுடியை ஓடவிட்ட ரஜினிகாந்த்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் அவர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் கபாலி படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் ஒன்றை கலை இயக்குநர் ராமலிங்கம் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

பெங்களூரில் சாதாரண நடத்துநராக இருந்த ரஜினிகாந்த் இன்று பல நடிகர்களையும், சினிமாவுக்கு நடிக்க வரவிருப்பவர்களையும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். எப்படியாவது ரஜினிகாந்த் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை நடிப்பவர்களுக்கும், நடிக்க வருபவர்களுக்கும் உள்ளுக்குள் கண்டிப்பாக இருக்கும். அந்த அளவுக்கு ரஜினி தனது தாக்கத்தை அழுத்தமாக பதித்துவிட்டார். தலைவர், தலைவர் என்று பலரால் அழைக்கப்படும் அவருக்கு இந்திய திரையுலகில் அனைவருமே ரசிகர்கள்தான்.

Rajinikanth Vettaiyan Coolie

வேட்டையன்: கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். இதனையடுத்து ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் போலி என்கவுன்ட்டரை எதிர்த்து போராடும் ரோலை ஏற்றிருப்பதாகவும்; இதில் அவர் இஸ்லாமியராக நடித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. தனது மகள் இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படத்திலும் இஸ்லாமியராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷின் கூலி: வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்த லோகேஷ் கூலி படத்தையும் மெகா ஹிட்டாக கொடுப்பார் என்று ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் இப்போதே எதிர்பார்த்திருக்கின்றனர்.

பக்குவப்பட்ட ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் இப்போது பக்குவப்பட்ட மனிதராக காட்சியளிக்கிறார். ஆனால் தான் வளர்ந்துவந்த சமயத்தில் தனது மனதில் பட்டதை பட்டென்று பேசும் வல்லமை கொண்டவர் அவர். அதுமட்டுமின்றி சில அடிதடி பிரச்னைகளிலும் அவர் சிக்கியிருப்பதாக செய்திகள் உலாவியது உண்டு. இந்நிலையில் கபாலி படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சம்பவத்தை அந்தப் படத்தின் கலை இயக்குநர் ராமலிங்கம் ஒரு பேட்டியில் பகிர்ந்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

என்ன நடந்தது?: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "கபாலி படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. மலேசிய ஏர்போர்ட்டில் ஒருவர் (அவர் அங்கு கொஞ்சம் பெரிய ஆள்) எங்களுடன் ஃபோட்டோ எடுக்கவில்லை என்றால் உங்களால் இந்தியாவுக்கே திரும்பி போகமுடியாது என்று யூனிட் ஆட்களிடம் மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். இது ரஜினிகாந்த்துக்கு தெரிந்துவிட்டது. உடனே அந்த நபரை அழைத்த ரஜினி என்னவென்று கேட்டுவிட்டு; என்னது நாங்க இந்தியா போக முடியாதா?.. நீ இந்த ஊர்லையே இருக்கமாட்ட என்று சொல்லிவிட்டு; மலேசியாவில் மிகப்பெரிய நபரின் பெயரை அழைத்தார். அந்த இடத்திலேயே மிரட்டியவர் சரண்டர் ஆகிவிட்டார். அதை பார்க்கும்போது பாட்ஷா படம் பார்த்த மாதிரியே இருந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X