ஜனநாயகன் 3 மணி நேர படமும் லீக்.. எவன் பார்த்த வேல இது.. பிரபலங்கள் கண்டனம்!
சென்னை: எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் நேற்று இணையத்தில் வெளியானநிலையில், தற்போது மூன்று மணிநேர முழு படமும் இணையத்தில் வெளியாகி இருப்பதால் படக் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இது மிகப்பெரிய சதி என சினிமா பிரபலங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து கண்டித்து வருகின்றனர்.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் அனுப்பியது. மறு தணிக்கை குழு மும்பையில் படத்தை பார்த்துவிட்டு சில மாற்றங்களை செய்யும்படி பரிந்துரை செய்தனர்.

ஜனநாயகன் லீக்: படத்தில்அரசியல் சார்ந்த காட்சிகள், வசனங்கள் இருப்பதால், தேர்தல் ஆணையம் படத்தை பார்க்க பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு, ஏப்ரல் 24ந் தேதி அல்லது ஏப்ரல் 30ந் தேதி வெளியாகும் என்று தகவல் பரவிய நிலையில், நேற்று படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது மூன்று மணிநேர முழு படமும் இணையத்தில் வெளியாகி இருப்பதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து எச் வினோத் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். "ஒவ்வொரு காட்சியும் யாரோ ஒருவரின் கனவு. வெளியீட்டுக்கு முன் லீக் ஆகுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தயவுசெய்து அதை பகிர வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடை செய்யுங்கள்: இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது எக்ஸ் தள பக்கத்தில், போலி கணக்குகள் மூலம் லீக் செய்யப்பட்ட வீடியோக்களை பகிர்ந்து வரும் அனைவரையும் உடனடியாக கண்டறிந்து, சைபர் கிரைம் மூலம் தடை செய்ய வேண்டும்.Jana Nayagan படக்குழு மற்றும் KVN Productions உடனடியாக புகார் அளித்து, இந்த வீடியோக்கள் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தை பாதிக்கும்: H. Vinoth அவர்களின் பதிவு உண்மையிலேயே மனதை நெகிழ வைக்கிறது. ஒவ்வொரு காட்சியும் யாரோ ஒருவரின் கனவு. இப்படியான லீக்குகள் ஒரு படத்தை மட்டுமல்ல, முழு தமிழ் திரையுலகையும் பாதிக்கிறது. தேவையற்ற சதி கதைகள் பேசாதீர்கள், லீக் வீடியோக்களை ட்விட்டர், ரீல்ஸ் போன்றவற்றில் பகிராதீர்கள். சினிமாவை சரியான முறையில் ஆதரிக்கவும். இப்படியான செயல்கள் தமிழ் சினிமாவின் வருமானத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் என பதிவிட்டுள்ளார். அதே போல சந்தானு பாக்யராஜ், ஒருவரின் கனவு இணையத்தில் இரத்தமாக சிந்துகிறது.அவர்களின் கடின உழைப்பை ஒரு ஃபார்வர்ட் கிளிப்பாக மாற்றாதீர்கள். படம் திரையில் சுவாசிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











