ஃபகத் பாசில் பயன்படுத்தும் பட்டன் ஃபோனே இவ்வளவு லட்சமா?.. அடேங்கப்பா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்
திருவனந்தபுரம்: மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் பகத் பாஸில் அவர் தற்போது இந்திய அளவில் பேமஸான நடிகராக இருக்கிறார். தமிழிலும் வரிசையாக படங்கள் செய்ய ஆரம்பித்திருக்கும் அவர்; இப்போது வடிவேலுவுடன் மாரீசன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் பயன்படுத்தும் மொபைலின் விலை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார். ஆனால் கண்கள், உடல் மொழி என அனைத்திலும் நடிக்கும் ஹீரோக்கள் குறைந்துவருகிறார்கள். ஆனால் ஃபகத் பாசிலோ அதனை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் எனவே அவரது நடிப்பை விட அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அலட்டல் இல்லாத நடிப்பு அவரது டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார்.இதன் காரணமாக மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
அதிக ரசிகர்கள் கொண்ட ஃபகத்: இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் மோகன் லால். அவருக்கென்று தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் எக்கச்சக்க பேர் இருக்கிறார்கள். மோகன் லால் தமிழில் இருவர் படத்தில் நடித்தார். அதில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தாலும் படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. அதேபோல் மம்மூட்டியும் தமிழில் தளபதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவருக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மோகன் லால், மம்மூட்டியைவிடவும் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் வைத்திருக்கும் மலையாள நடிகர் என்றால் அவர் ஃபகத் பாசில்தான்.
காரணம் என்ன?: அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஃபகத்தின் அலட்டல் இல்லாத நடிப்பு. மோகன் லால், மம்மூட்டி ஆகியோரிடமும் அது இருந்தாலும் அவர்களைவிடவும் ஃபகத்தை தமிழ்நாட்டில் ஒருபடி மேலே ரசிக்கிறார்கள். உதாரணமாக அவரது நடிப்பில் தமிழில் வெளியான மாமன்னன் படத்தை எடுத்துக்கொண்டால் புரிந்துகொள்ளலாம். அந்தப் படத்தின் இடைவேளை காட்சியில் ஃபகத்தின் நடிப்பு அசுரத்தனமாக இருக்கும்.

மாரீசன் ஃபகத்: இதற்கு முன்னதாக தமிழில் அவர் வேலைக்காரன், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அந்தப் படங்களில் நடித்தபோதே அவர் பிரபலம்தான். ஆனாலும் மாமன்னன் படம் தமிழில் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்துவிட்டது. அடுத்ததாக நடித்த வேட்டையனிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இப்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
மொபைலின் விலை: இந்நிலையில் ஃபகத் பாசில் பயன்படுத்தும் மொபைல் ஃபோன் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் Vertu என்ற நிறுவனத்தின் பட்டன் மொபைலைத்தான் பயன்படுத்துகிறாராம். அவர் யூஸ் செய்யும் ஃபோன் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகிவிட்டதாம். அதன் இந்திய மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், ஃபகத் அனைத்திலுமே வித்தியாசம்தான். பட்டன் ஃபோனையே 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











