அஜித்தின் அறிக்கை.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?.. அதுவும் அரசியல் கட்சி தலைவராலா?.. பரபர தகவல்
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இரண்டு படங்களின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த குட் பேட் அக்லி தள்ளிப்போகிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அஜித் வெளியிட்ட அறிக்கையில் தன்னை யாரும் கடவுளே அஜித்தே என்று கூற வேண்டாம் என கோரிக்கை வைத்திருந்தார்.
அஜித்குமார் இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தி குட் பேட் அக்லி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இவற்றில் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணியையும் முடித்துவிட்டார். குட் பேட் அக்லியின் இறுதிக்கட்ட பணிகளில் அவர் இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால்; இந்த இரண்டு படங்களும் அதேபோல் ஹிட்டாக வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

அஜித்தின் அறிக்கை: இதற்கிடையே சமீப நாட்களாக கடவுளே அஜித்தே என்று கோஷமிட்டனர் அஜித் ரசிகர்கள். அதனையடுத்து அஜித் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க... அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
குவியும் வாழ்த்து: அஜித்தின் இந்த அறிக்கை பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. தனது ரசிகர்களிடம் ஒரு நடிகர் இப்படி சொல்வதற்கு பெரும் தைரியமும் பக்குவமும் வேண்டும். அந்த இரண்டுமே அவரிடம் இருக்கின்றன. அஜித்தின் பேச்சை கேட்டு இனியாவது அவரது ரசிகர்கள் பொது வெளியில் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்றும் பலர் கூறிவருகிறார்கள். ஏகேவின் பேச்சை அவரது ரசிகர்கள் கேட்பார்களா இல்லையா என்பது போகப்போக தெரிந்துவிடும். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
என்ன தகவல்: அதாவது ரசிகர்கள் க.. அஜித்தே என்று தொடர்ந்து கோஷமிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருமுறை அமமுக தலைவர் டிடிவி தினகரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போதும் அங்கிருந்த சிலர் கடவுளே அஜித்தே என்று கோஷமிட்டார்கள். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. சூழல் இப்படி இருக்க அந்த வீடியோ அஜித்தின் கவனத்துக்கும் சென்றதாகவும்; இனியும் இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என முடிவு செய்துதான் அதிரடியாக இப்படி ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டார் என்று கூறப்படுகிறது. என்ன காரணமாக இருந்தால் என்ன அந்த அறிக்கை நல்ல விஷயத்தைத்தானே சொல்கிறது என்பதுதான் திரைத்துறையில் பலரின் குரலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











