Vijay - அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர் சொன்ன கதை.. விஜய் ஏன் நோ சொன்னார் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி துருக்கி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் நடந்தது. இதுவரை இரண்டு மூன்று ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்திருப்பதாகவும் விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றும் தகவல் ஒன்று கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய்தான் இப்போது அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் கலெக்ஷன் ரீதியாக பட்டையை கிளப்புகிறது என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அந்த படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்களும் கூறுகின்றன.

லியோவும் அப்படியே: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட உலகம் முழுவதும் 600 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இதற்கு முன்னதாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்திருக்கின்றனவாம். அதனால் விஜய்யின் சம்பளமும் தாறுமாறாக ஏறியிருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு ஓடுகிறது.
GOAT: அந்தவகையில் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக விஜய்க்கு கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லபடுகிறது. ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் விஜய்தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் 150 கோடி ரூபாய் எல்லாம் வாய்ப்பே இல்லை என்று திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.
அடுத்த படம்: GOAT படத்தை முடித்துவிட்டு தனது 69ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பினை விஜய் யாருக்கு கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு பரவலாக இருந்துவருகிறது. இச்சூழலில் அந்த வாய்ப்பை கார்த்தி சுப்புராஜ் தட்டி சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில்கூட, ஏற்கனவே விஜய்யிடம் கதை சொல்லி மிஸ் ஆகிவிட்டது. இந்த முறை கண்டிப்பாக மிஸ் ஆகாது என்று ஆணித்தரமாக கூறினார் கார்த்திக்.
சரண் சொன்ன கதை: இந்த சூழலில் விஜய் பற்றிய ஒரு விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது அஜித்தின் ஃபேவரைட் இயக்குநரான சரண் விஜய்யிடம் கதை சொன்ன விஷயம்தான் அது. இதுதொடர்பாக் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "விஜய்யுடன் நான் படம் செய்வதாகத்தான் இருந்தது. கவிதாலயா நிறுவனம்தான் அதை தயாரிக்கவிருந்தது. அவரிடம் சென்று நான் ஒரு கதையை கூறினேன். அது முழுக்க முழுக்க இரவில் ஷூட்டிங் நடப்பது போன்றும்; மும்பையில் நடப்பது போன்றும் இருக்கும்.
ஆனால் விஜய்யோ 9 டூ 6தான் நடிப்பேன்; ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் வரமாட்டேன் என்ற கொள்கையிலும் இருந்தார். அதுமட்டுமின்றி சில கெட் அப் மாற்றங்கள்; டபுள் ஆக்ஷன் போன்ற விஷயங்களும் அந்தக் கதையிலும் இருந்தன. இவை அனைத்தையும் மனதில் வைத்து அவர் என்னிடம், நாம் வேறு ஒரு படம் செய்யலாமா? தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று சொன்னார். அதனால் அந்தப் படம் நடக்கவில்லை" என்றார்.
அஜித்தின் ஃபேவரைட்: இயக்குநர் சரண் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்து அஜித்தை வைத்து காதல் மன்னன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானர். தொடர்ந்து அஜித்துடன் அவர் அமர்க்களம், அட்டகாசம், அசல் என் படங்கள் செய்தார். இவற்றில் அசல் தவிர்த்து மற்ற படங்கள் சூப்பர் ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித்தின் குட் புக்கில் எப்போதுமே சரண் இருப்பார் என்பதும் கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











