விஷால் - சாய் தன்ஷிகா திருமணம்.. ஆகஸ்ட் 29ல் நடக்க என்ன காரணம் தெரியுமா?.. டபுள் ட்ரீட்

சென்னை: அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்த விஷால்; சில சூழ்நிலைகளால் நடிகராக மாறினார். செல்லமே படம் ஹிட்டாகி தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துவந்த அவர் இடையில் வரிசையாக தோல்வியை சந்தித்தார். அவருக்கு பல வருடங்களுக்கு பிறகு மார்க் ஆண்டனி, மத கஜ ராஜா ஆகிய திரைப்படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அடுத்ததாக துப்பறிவாளன் 2 பட வேலைகளில் பிஸியாக இருக்கும் அவர் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையோடு சினிமாவுக்குள் வந்தவர் விஷால். அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் செல்லமே படத்தில் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் தொடர்ந்து நடிகராக பயணப்பட முடிவு செய்தார். அதன்படி அவர் நடித்த திமிரு, சண்டக்கோழி, தாமிரபரணி, மலைக்கோட்டை என வரிசையாக ஹிட் படங்களில் வைத்தார். முக்கியமாக கோலிவுட்டின் பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வருவார் என்றும் பலர் விஷாலுக்கு ஆரூடம் கூறினார்கள். அவரும் அதுமாதிரியான கதைகளைத்தான் தேர்ந்தெடுத்து நடித்தார்.

தோல்வி முகத்தில் விஷால்: அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் தோல்வியைத்தான் சந்தித்தன. அதிலும் பாலா இயக்கத்தில் நடித்த அவன் இவன் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் அவர். ஆனால் அந்தப் படமும் பலத்த அடியை வாங்கியது. அப்படிப்பட்ட சூழலில் சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு திரைப்படம் வெளியாகி அவருக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியிலேயே சிக்கின.

பல வருடங்கள் கழித்து ஹிட்: நிலைமை இப்படி இருக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார் அவர். டைம் டிராவல் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதனால் பல வருடங்கள் கழித்து அவருக்கு ஒரு ஹிட் கிடைத்தது. அந்த வைபோடு அவர் அடுத்து நடித்த ரத்னம் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக சுந்தர். சி இயக்கியிருந்த மத கஜ ராஜா இந்த வருட பொங்கலுக்கு வெளியானது.

The reason why Vishal and Sai Dhanshika are getting married on August 29th

மெகா ஹிட்டான மதகஜராஜா: அந்தப் படத்தை 13 வருடங்களுக்கு முன்னரே சுந்தர் இயக்கி முடித்துவிட்டார். சில காரணங்களால் இத்தனை வருடங்கள் கழித்து வெளியானது. இப்போதைய ஆடியன்ஸோடு படம் கனெக்ட் ஆகுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் ஆச்சரியம் கொடுக்கும் விதமாக படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இத்தனை வருடங்கள் கழித்து வெளியாகி மத கஜ ராஜா ஹிட்டாகியிருப்பதால் தாமதமாக ரிலீஸ் செய்தாலும் கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும் என்ற நம்பிக்கையும் கோலிவுட்டில் பிறந்திருக்கிறது.

திருமண அறிவிப்பு: இதற்கிடையே விஷாலுக்கு வயது ஆகிக்கொண்டே இருந்தாலும் திருமணம் மட்டும் செய்துகொள்ளாமல் இருந்தார். இடையில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தாலும் அது திருமணம்வரை செல்லவில்லை. அதுமட்டுமின்றி நடிகர் சங்க கட்டடத்தை திறந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காதவகையில் சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன் என்று அவர் அறிவித்தார்.

ஏன் அந்த தேதி?: ஆகஸ்ட் 29ஆம் தேதி தங்கள் திருமணம் நடக்கும் என்று இரண்டு பேரும் அறிவித்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க ஆகஸ்ட் 29ஆம் தேதியை எதற்காக தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது புதிதாக கட்டப்பட்டுவரும் நடிகர் சங்க கட்டடத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி எப்படியாவது திறந்துவிட வேண்டுமென்பதில் மும்முரமாக இருக்கிறாராம் அவர். எனவே அந்தக் கட்டடத்தை திறந்த கையோடு இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷாலின் பிறந்தநாளும் வருகிறது. எனவே தன்னுடைய பிறந்தநாளிலேயே திருமணத்தை வைத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்துதான் அந்த தேதியை ஃபிக்ஸ் செய்திருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X