Ajith X Sivakarthikeyan: அபுதாபியில் AK உடன் SK.. அஜித் சொன்ன வார்த்தை.. SKவுக்கு காலத்துக்கும் மறக்காது

சென்னை: நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரது நடிப்பில் அவரது 64 வது படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் துபாய் மற்றும் மலேசியாவில் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பிரபலங்கள் பலரும் அஜித்தை கார் ரேஸ் நடக்கும் சர்க்யூட்டிற்கே சென்று சந்தித்து அவரை உற்சாகப்படுத்தி வருகிறார்க்ள். அந்த வகையில் இன்று அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார்.

அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டார். இப்படி இருக்கையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த மாதத்திலேயே தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் ரேஸ்க்குள் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி கொள்ளத் தொடங்கிய அஜித் இன்னும் அதில் இருந்து வெளிவரவில்லை.

The Ultimate Fanboy Moment Sivakarthikeyan Visits Ajith Kumar at Dubai Racing Track

அஜித் - சிவகார்த்திகேயன்: இப்படி இருக்கையில் அவர் எப்போதுதான் படத்தின் படப்பிடிப்பை தொடங்க ரெடியாவார் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது துபாயில் உள்ள அபுதாபியில் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரை தமிழ் திரையுல நடிகர்களும் நட்சத்திரங்களும் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். ஏற்கனவே விக்னேஷ் சிவன் நயன் தம்பதியர் சென்று சந்தித்தார்கள். அதேபோல் நடிகர் மாதவனும் சென்று சந்தித்தார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்தை கார் ரேஸ் சர்க்யூட்டிற்குச் சென்று சந்தித்துள்ளார்.


துபாய் வீடு: இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. வீடியோக்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சிவகார்த்திகேயன் துபாயில் தனது பெயரில் இரண்டு வீடுகள் வாங்கி உள்ளார். இதன் கட்டிட வேலைகளை பார்க்கச் சென்ற சிவகார்த்திகேயன் அப்படியே தல அஜித்தையும் சென்று சந்திக்க திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள திரைப்பிரபலம் ஒருவரின் வீட்டிற்குச் சென்றபோது சிவகார்த்திகேயன் வீட்டுக் கதவைத் தட்ட, ஏற்கனவே அங்கு சென்றிருந்த அஜித் கதவைத் திறந்துள்ளார்.

அக்கறை: கதவைத் திறந்து சிவகார்த்திகேயனைப் பார்த்ததும், வெல் கம் டு பிக் லீக் சிவா என்று கூறினார் என்று சிவகார்த்திகேயன் ஒருமுறை கூறினார். அப்படி சிவகார்த்திகேயனின் வளர்ச்சியிலும் நலத்திலும் அஜித் எப்போதுமே அக்கறை செலுத்துபவராக இருக்கிறார் என்று சிவகார்த்திகேயனே சொல்லி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X