அம்மா மகன் பாசம்… செம சென்டிமென்ட்… தேள் ஸ்னீக் பீக் வீடியோ !

சென்னை : அறிமுக இயக்குநர் ஹரிகுமார் இயக்கியுள்ள தேள் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.

இத்திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 14 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இதில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ், சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தேள்

தேள்

நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளனர், இயக்குனர் என பன்முகத் தன்மைக் கொண்ட பிரபு தேவா. தற்போது, இவர் அறிமுக இயக்குநர் ஹரிகுமார் இயக்கி உள்ள தேள் திரைப்படத்தில் நடித்துள்ளார். தாய் மகனுக்கு இடையேயான பாசப்போராட்டத்தை கதைக்களமாக கொண்டு தேள் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 தேள் திரைப்படத்தில்

தேள் திரைப்படத்தில்

பிரபு தேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். காமெடி, கலாட்டா நிறைந்த குடும்ப திரைப்படமாக உருவாகியிருக்கும் தேள் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

பொங்கலுக்கு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸ்

அத்திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 14ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. பொங்கல் ரிலீஸாக கொம்பு வச்ச சிங்கமடா, கார்பன், என்ன சொல்ல போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளன. அந்த வரிசையில் தேள் திரைப்படமும் ரிலீஸாக உள்ளது.

ஸ்னீக் பீக்

இந்நிலையில், தற்போது தேள் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஈஸ்வரி ராவ் பிரபுதேவாவின் அம்மாவாக நடித்துள்ளார். இருவருக்கும் இடையேயான அழகான பாசமும், ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் அழகாக காட்டப்பட்டுள்ளது.

பல திரைப்படங்களில்

பல திரைப்படங்களில்

நடிகர் பிரபுதேவா பஹீரா, மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. மேலும், ஐஸ்வர்யா ராஜேஷுடன் புதிய படத்திலும், பா.விஜய் இயக்கத்தில் பெயரிடாதப் படத்திலும் நடித்து வருகிறார். பிரபுதேவா காவல்துறை அதிகாரியாகநடித்த பொன்மாணிக்க வேல் திரைப்படம் ஓடிடியில் கடந்த மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X