தனுஷ் இப்படி செய்யலாமா? 20 கோடி ரூபாய் இழப்பீடு.. நோட்டீஸ் அனுப்பிய பிரபல தயாரிப்பு நிறுவனம்!
சென்னை: நடிகர் தனுஷ் எங்கள் நிறுவனத்திற்கு படத்தை இயக்கி தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், இவர் இதுவரை படத்தை இயக்கி தரவில்லை, அவர் சொன்னபடி படத்தை இயக்கி தர வேண்டும். இல்லை என்றால், செலவு செய்த தொகையை திருப்பி தர வேண்டும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் தனுஷூக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ். அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நடிகராக இருக்கிறார். நடிகர், இயக்குநர்,பாடகர்,பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட தனுஷ், நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராக பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோவம், இட்லி கடை போன்ற படத்தை இயக்கினார். இதில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இட்லி கடை படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

நடிகர் தனுஷ்: ஆனால், தனுஷ் நடித்த 'தேரே இஷக் மெய்ன்' படம் நல்ல வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது 'போர் தொழில்' இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் டைட்டில் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்பட்டது. இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், சூரஜ் வெஞ்சாரமூடு, கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தபடத்தை தொடர்ந்து 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.
இழப்பீடு கேட்டு நோட்டீஸ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ், நடிகர் தனுஷுக்கு இழப்பீடு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கடந்த 2016ம் ஆண்டு 'ருத்ரன்' என்ற படத்திற்காக தனுசை ஒப்பந்தம் செய்தோம். ஆனால், தனுஷ்,அந்த படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு, அந்த படத்துக்கு பதில், வேறு படத்தை நடித்து இயக்கி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதனால், அந்த படத்தில் நடிக்க, நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா போன்ற நடிகர்களுக்கு முன்பணமாக 20 கோடி ரூபாய் வரை கொடுத்து செலவு செய்து இருக்கிறோம். இத்தனை ஆண்டுகள் ஆன போதும், தனுஷ் மற்ற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால், அவர்கள் தயாரிப்பில் உருவாகி வந்த 'ருத்ரன்' படம் பாதியிலேயே முடங்கியுள்ளதாக தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த படத்திற்கான கால்ஷீட் குறித்து தனுஷ் உடனடியாக தனது முடிவை தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால், படத்திற்காக செலவு செய்த தொகையை திருப்பி தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











