அட விஜய்யின் ஜன நாயகன் படத்தில் இத்தனை பாடல்களா?.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்குபோல

சென்னை: ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படம் ஜன நாயகன். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அதனை பார்க்கையில் இந்தப் படம் அரசியல் ஜானரில் உருவாகலாம் என்ற கருத்து பலரிடம் நிலவிவருகிறது. இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. முதன்முறையாக இரண்டு பேரும் இணைந்திருந்ததால் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. முக்கியமாக படத்தில் புதுமையாக எதுவுமே இல்லை; யூகிக்கக்கூடிய திரைக்கதையாகத்தான் இருந்தது என்று பலரும் ஓபனாகவே பேசினார்கள்.

தமிழக வெற்றிக் கழகம்: GOAT படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஹெச். வினோத் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் விஜய். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களமாட இருக்கிறது. கண்டிப்பாக விஜய்யை வெல்ல வைத்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும் என்று அவரது கட்சியினர் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.

There are a total of five songs in Vijay s Jana Nayagan

கடைசி படம்: அரசியலில் அவர் நுழைந்திருப்பதால் இந்தப் படம்தான் அவருக்கு கடைசி படம் என்று கருதப்படுகிறது. விஜய் போன்ற மிகப்பெரிய வியாபாரம் உடைய ஹீரோ ஒருவர்; தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதை சமுத்திரகனி உள்ளிட்டோர் பாராட்டிவருகின்றனர். அதேசமயம் தங்கள் தளபதி சினிமாவை விட்டு விலகுகிறாரே என்று அவரது ரசிகர்கள் கொஞ்சம் சோகமடைந்திருப்பதும் உண்மைதான்.

ஜன நாயகன்: விஜய் இப்போது நடித்துவரும் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். படத்தின் பெயரும், போஸ்டர்களும் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் அரசியலை மையப்படுத்திதான் இருக்கும் என்று உறுதியாக சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் வினோத்தோ அப்படி இருக்காது என்று ஒரு விழாவில் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

எத்தனை பாடல்கள்: இந்நிலையில் ஜன நாயகன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருப்பதாகவும்; இந்த ஐந்து பாடல்களிலுமே விஜய்யின் நடனம் அட்டகாசமாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. விஜய் படம் என்றாலே அதில் இடம்பெறும் பாடல்கள் ஹிட் ஆகும் என்பது அனைவரும் அறிந்தது. அதேபோல் இப்படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், லியோ, பீஸ்ட் உள்ளிட்ட படங்களுக்கு அனிருத் ஏற்கனவே இசையமைத்திருக்கிறார். அந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவை. எனவே இந்தப் படத்திலும் விஜய்க்கு அனிருத் கண்டிப்பாக தரமான இசையை அமைத்திருப்பார் என்று விஜய்யின் ரசிகர்களும், அனிருத்தின் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X