Samantha - சமந்தா - நாக சைதன்யா.. இரண்டு பேரும் இன்னொரு வாழ்க்கைக்கு தயாராகிவிட்டார்களா?.. பரபரக்கும் தகவல்
ஹைதராபாத்: நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரின் திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை இருவருமே தங்களது திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தனர். அதன் பிறகு சிங்கிளாக இருந்தனர். சமீபமாக சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்கவிருக்கிறது என்று தகவல் வெளியான சூழலில் தற்போது நாக சைதன்யாவுக்கும் இரண்டாவது திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்தது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

உச்சம் சென்ற சமந்தா: திருமண வாழ்க்கை முடிந்துவிட்டதால் அது கொடுக்கும் மன அழுத்தம் காரணமாக இனி சமந்தாவால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாது என பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் அவர்களது ஆரூடத்தை அடித்து நொறுக்கும்படி சமந்தா கோலிவுட், ஹாலிவுட் என றெக்கை கட்டி பறந்தார். நடிப்பு மட்டுமின்றி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமாவுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது கரியர் கிராஃப் உச்சம் சென்றது.
சமந்தாவுக்கு வந்த நோய்: இப்படி அவரது கரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரசிகர்கள் அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி அடைய; தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு அந்த நோயிலிருந்து மீண்டார். அதனையடுத்து சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்துவிட்டு குட்டி பிரேக் எடுத்தார். தற்போது அவர் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடித்துவருகிறார்.
நாக சைதன்யா: சமந்தாவை பிரிந்ததிலிருந்து நாக சைதன்யாவும் தனது கரியரில் கவனம் செலுத்திவருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த கஸ்டடி திரைப்படம் ஹிட்டாகவில்லை. அதேசமயம் தூதா என்ற வெப் சீரிஸ் ஓரளவு டீசண்ட்டான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துவருகிறார் அவர். கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சைதன்யா.
இரண்டாவது திருமணம்?: இந்நிலையில் நாக சைதன்யா குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதன்படி அவருக்கு அவரது தந்தையான நாகார்ஜுனா இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. வெளியிலிருந்து பெண் எடுத்தால்தான் பிரச்னை என்று நினைக்கும் அவர் தனது உறவினர் ஒருவரின் மகளையே நாக சைதன்யாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருப்பதாக டோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. அதேபோல் சமந்தாவுக்கும் அவரது உறவினர் பையன் ஒருவரை திருமணம் செய்து வைக்க சமந்தாவின் குடும்பத்தினர் முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
மௌனம் கலைத்த நாக சைதன்யா: முன்னதாக சமந்தா குறித்து கடந்த வருடம் அளித்திருந்த ஒரு பேட்டியில் பேசியிருந்த நாக சைதன்யா, "நாங்கள் பிரிந்து 2 வருடம் ஆகிறது. முறைப்படி விவாகரத்து செய்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நாங்கள் அவரவர் வாழ்க்கைக்கு நகர்ந்துவிட்டோம். எங்களின் அந்த திருமண வாழ்க்கை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. சமந்தா இனிமையானவர். அவர் அனைத்து மகிழ்ச்சிக்கும் தகுதியானவர்" என கூறியிருந்தார்.
காதலில் நாக சைதன்யா: இதற்கிடையே நாக சைதன்யாவும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சோபிதா துலிபாலேவும் காதலிப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. இருவரும் ஜோடியாக வெளியில் சென்ற புகைப்படமும், இருவரும் லண்டனில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்ட புகைப்படமும் இணையத்தில் வெளியானதை அடுத்து இருவரும் காதலிப்பது உறுதியாகவிட்டது என்று சோஷியல் மீடியாவில் பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











