சிம்புவுக்கு திருமணமா?.. மறுபடியும் முதல்லயிருந்தா?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு

சென்னை: தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது என பல ஜானர்களில் தனது முத்திரையை பதித்திருக்கிறார். இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் தக் லைஃப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துவரும் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார்.

சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்துவருபவர் சிம்பு. எஸ்டிஆர், லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் இடையில் சில காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகள்தான் என்று ஒருதரப்பினர் சொல்ல; அவரோ ஆன்மீகத்தை தேடி சென்றுகொண்டிருந்தார். மேலும் உடல் எடையும் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இனி சிம்பு அவ்வளவுதான்; மீண்டு வரவேமாட்டார் என்றெல்லாம் பலரும் பேசினார்கள்.

simbu nithi agarwal thug life

தரமான ரீ என்ட்ரி: ஆனால் அந்தப் பேச்சுக்களை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக மீண்டும் சினிமாவுக்கு வந்தார். தனது உடல் எடையை குறைத்து விண்டேஜ் சிம்புவாக ரீ என் ட்ரி கொடுத்த அவர் மாநாடு படத்தில் நடித்து மெகா ஹிட்டை பெற்றார். அதில் சிம்புவின் எனர்ஜியையும், நடிப்பையும் பார்த்த ரசிகர்கள் இனி சிம்புவை ஒன்றுமே யாராலும் செய்யமுடியாது என்று உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார்.

எஸ்டிஆர் 48: அதனையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். பிரமாண்ட படமாக உருவாகும் எஸ்டிஆர் 48; நிச்சயம் சிம்புவின் கரியரில் மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அந்தக் கதையை தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்த்துக்காக எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு எழுதிய கதையில் சிம்பு கமிட்டானது ரசிகர்களை மேலும் மகிழ்வித்திருக்கிறது.

தக் லைஃப்: இதற்கிடையே மணிரத்னம் - கமல் ஹாசன் இணைந்திருக்கும் தக் லைஃப் படத்திலும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார் சிலம்பரசன். நிச்சயம் இப்படத்துக்கு சிம்புவின் ரோல் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. தக் லைஃப் படத்தோடு சேர்த்து இதுவரை 49 படங்களில் நடித்திருக்கும் சிம்பு; 50ஆவது படத்தை யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.

திருமணம்: இப்படி சினிமாவில் பயங்கர பிஸியாக சிம்பு இருந்தாலும் அவரது ரசிகர்களுக்கு ஒரு சின்ன குறை இருக்கிறது. நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி ஆகிய இருவருடனும் இருந்த சிம்புவின் காதல் பிரேக் அப்பில் முடிந்தது. காதல்கள் பிரேக் அப் ஆனாலும் சிம்பு விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பது ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது. சிம்புவோ அதுகுறித்து எந்தவிதமான ரியாக்‌ஷனும் கொடுப்பதில்லை.

வதந்தி: ஆனால் அவருக்கு திருமணம் நடக்கவிருக்கிறது என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் இப்போது மீண்டும் அதுமாதிரியான தகவல் பரவிவருகிறது. அதாவது ஈஸ்வரன் படத்தில் நடித்தபோது அப்படத்தின் ஹீரோயின் நிதி அகர்வாலுடன் சிம்புவுக்கு காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது வெறும் கிசுகிசுதான் என்பதை காலம் உணர்த்தியது. சூழல் இப்படி இருக்க, சிம்புவுக்கும் நிதி அகர்வாலுக்கும் விரைவில் திருமணம் என்று மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆகமொத்தம் சிம்புவின் திருமணத்தில் அவரைவிடவும் மற்றவர்களுக்கு அதீத அக்கறை இருப்பது புரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X