ஒரே ஒரு பாட்ஷாதான்... இரண்டாம் பாகமெல்லாம் சரிப்படாது!- ரஜினி

By Shankar

ஒரே ஒரு பாட்ஷாதான்... இரண்டாம் பாகம் எடுத்தா, பாட்ஷா உண்டாக்கிய அந்த மேஜிக் உடைந்துவிடும், என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளார்.

பாட்ஷா படம் ரஜினியின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பெரிய மாற்றத்தை உண்டாக்கிய படம். ஒரு ஆட்சியையே மாற்றிய பெருமை அந்தப் படத்துக்கு உண்டு.

தெலுங்கு - மலையாளத்திலும்

தெலுங்கு - மலையாளத்திலும்

தமிழ் சினிமா பார்த்திராத பிரமாண்ட வெற்றியை அந்தப் படம் பெற்றது. இதன் நேரடி தமிழ்ப் பதிப்பு கேரளாவில் நூறு நாட்கள் ஓடியது.

தெலுங்கில் டப் செய்யப்பட்ட பாட்ஷா, நேரடி தெலுங்குப் படங்களைவிட பெரிய வெற்றி பெற்றது.

19 ஆண்டுகள்

19 ஆண்டுகள்

இந்தப் படம் வெளியாகிகிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இப்போதும் தொலைக்காட்சியில் இந்தப் படத்தை ஒளிபரப்பினால், வேறு சேனலுக்கு தாவாமல் பார்க்கிறார்கள் மக்கள். இந்தப் படம் முதல் முறை சன் டிவியில் ஒளிபரப்பானபோது, மூன்று மணி நேரம் தமிழகத்தின் தெருக்கள் வெறிச்சோடின. ஏதோ பந்த் நடக்கிறதோ என கேட்க வைக்கும் அளவுக்கு மக்களைக் கட்டிப் போட்டிருந்தது பாட்ஷா.

அனுமதி மறுத்த ஆர்எம்வீ

அனுமதி மறுத்த ஆர்எம்வீ

இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போவதாக சிலர் கிளம்பினர். ஆனால் தயாரிப்பாளர் ஆர்எம் வீரப்பன், அதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றார்.

உடனே, பாட்ஷா டைப்பில் பல படங்களை தயாரித்து வெளியிட்டனர். விஜய் நடித்த பகவதி, சரத்குமார் நடித்த அரசு என பல படங்களின் கதையமைப்பு பாட்ஷா மாதிரியே இருக்கும்.

இரண்டாவது பாகம்

இரண்டாவது பாகம்

இன்னொரு பக்கம் பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தையாவது எடுக்கலாம் என ரஜினியை அணுகினர். பாட்ஷாவை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, இரண்டாம் பாகக் கதையின் அவுட்லைனை ரஜினியிடம் கூறினார். அவர், முதல் பாகத்தைப் போல இந்த இரண்டாம் பாகம் ஓடுமா என்பதில் சந்தேகமிருக்கிறது என வெளிப்படையாகக் கூறிவிட்டார்.

ரஜினி கருத்து

ரஜினி கருத்து

இந்த நிலையில், ஜெயா டிவிக்காக சமீபத்தில் ரஜினியை பேட்டி கண்டுள்ளார் நடிகர் விவேக். அப்போது பாட்ஷா இரண்டாம் பாகம் குறித்து ரஜினியிடம் கேள்வி எழுப்பினாராம்.

அதற்கு ரஜினி அளித்த பதில், "ஒரே ஒரு பாட்ஷாதான் தமிழ் சினிமாவில். அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தா, பாட்ஷா உண்டாக்கிய அந்த மேஜிக் போயிரும். இரண்டாம் குறித்து எனக்கு ஐடியா இல்லை!"

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X