டாப் ஸ்டார் பிரசாந்தை டாக்டராக்க நினைத்த அப்பா.. ஜோசியர் சொன்ன விஷயம்.. தியாகராஜன் ஓபன் பேட்டி!

சென்னை: 1990ல் வெளியான "வைகாசி பொறந்தாச்சு பிரசாந்த்" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் தான் நடிகர் பிரசாந்த். அந்தப் படத்தை தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, உனக்காக பிறந்தேன், எங்க தம்பி, திருடா திருடா, ஆணழகன், கல்லூரி வாசல் என பல படங்களில் பிரசாந்த் நடித்து வந்தார்.

1998-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் நடிகர் பிரசாந்தை டாப் ஸ்டாராக மாற்றியது. பிரசாந்துக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார். ஜீன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து கண்ணெதிரே தோன்றினாள், பூமகள் ஊர்வலம், ஜோடி, அப்பு, ஸ்டார், மஜ்னு, வின்னர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் பிரசாந்த்.

Thiagarajan opens up he initially wants his son Prashanth to become a doctor not an actor

90-களில் நம்பர் ஒன் நடிகராக விஜய் அஜித்துக்கு டஃப் கொடுத்து வந்த பிரசாந்த் அதன் பின்னர் திருமணமான நிலையில், குடும்பத்தில் அவருக்கு ஏற்பட்ட சூழல் காரணமாக அடுத்தடுத்து சரிவை சந்திக்க ஆரம்பித்தார். ஆயுதம், லண்டன், பொன்னர் சங்கர், ஜாம்பவான், மம்பட்டியான், சாகசம் மற்றும் ஜானி உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

தியாகராஜன் பேட்டி: நடிகர் பிரசாந்தின் தந்தையும் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆரம்பத்தில் பிரசாந்தை ஹீரோவாக ஆக்க வேண்டுமென்றே நினைக்கவில்லை என்றும் அவரை ஒரு டாக்டர் ஆக்க வேண்டும் என்று விரும்பினேன் எனக் கூறியுள்ளார்.

டாக்டராக வேண்டிய பிரசாந்த்: நடிகர் பிரசாந்தை நடிக்க வைக்க வேண்டும் என நினைக்கவில்லை என்றாலும் நல்ல அழகான ஒரு டாக்டராக வேண்டுமென நினைத்தேன். அதன் காரணமாக அவருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் வயதில் இருந்து வழங்கி வந்தேன். குறிப்பாக திரை உலகத்தினர் பார்வையில் இருந்து அவரை மறைத்தே வைத்தேன். ஒரு நாள் சத்யராஜ் வீட்டுக்கு வந்த போது என் மகளை பார்த்து விட்டார். தியாகராஜனுக்கு இவ்வளவு பெரிய மகனா என சினிமா உலகத்திற்கு தெரியும்படி செய்துவிட்டார். அதன் பின்னர் பாலுமகேந்திரா உள்ளிட்ட பல இயக்குநர்கள் பிரசாந்த் நடிக்க வைத்தே ஆக வேண்டும் என வற்புறுத்தினர். டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கிறார். அந்த தேர்வில் தோல்வி அடைந்தால், பார்க்கலாம் என்றேன். அதைப்போல தகுதி தேர்வில் பிரசாந்த் தேர்வாகவில்லை.

Thiagarajan opens up he initially wants his son Prashanth to become a doctor not an actor

ஜோசியர் சொன்ன விஷயம்: அந்த நேரத்தில் ஜோசியர் ஒருவரை சந்தித்தேன். டாக்டராகும் வாய்ப்பு பிரசாந்துக்கு இல்லை என்றும் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக அவர் ஜொலிப்பார் என்றும் கூறினார். அதன் பின்னரே பிரசாந்தின் சினிமாவில் அறிமுகம் செய்தேன் என அவரது தந்தை தியாகராஜன் கூறியுள்ளார்.

அப்பா தான் கெடுக்கிறார்: பிரசாந்துக்கு படங்கள் சரியாக ஓடாத நிலையில், அப்பா தான் அவரை கெடுக்கிறார் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால், இதுவரையில் அவர் விஷயத்தில் நான் தலையிட்டதே கிடையாது என்றும் அவருக்கு என்னால் முடிந்த உதவிகளை மட்டும் தான் செய்து வருகிறேன் என்றும் உருக்கமாக பேசியுள்ளார். விரைவில் அந்தகன் படம் வெளியாகும் என்றும் கோட் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிரசாந்த் நடித்து பழைய பன்னீர் செல்வமாக வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் தியாகராஜன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X