ஓட்டுப்போடும் எல்லோரும் அரசியல்வாதிகள்தான்- கமல் பேட்டி
சென்னை: ஓட்டுப் போடும் அனைவருமே இங்கே அரசியல்வாதிகள்தான் என்று கமல்ஹாஸன் கூறினார்.
தனது பிறந்த நாளையொட்டி தாம்பரம் மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கமல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அரசியல் சார்பா?
அரசியல் சார்போடுதான் இந்த பணியில் பங்கெடுத்து உள்ளீர்களா?
'ஓட்டுப் போடும் எல்லோருமே அரசியல்வாதிகள்தான்.'

ரஜினிக்கு அழைப்பு
ரஜினிகாந்த் பாரதீய ஜனதாவில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதே? உங்களுக்கு ஏன் அழைப்பு வரவில்லை.
"ஒருவரைக் காட்டி அவர் பெயர் என்ன என்று கேட்டால் எனக்கு எப்படி தெரியும். என்னை பொறுத்தவரை ஒரு இந்திய குடிமகனாக இந்த தூய்மை பணியில் ஈடுபட்டு இருக்கிறேன்."

நன்றி
60-வது பிறந்தநாளையொட்டி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
"தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி. நான் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவது இல்லை. பிறந்தநாளையொட்டி இந்த தூய்மை பணியை மேற்கொண்டு இருக்கிறேன்."

உத்தம வில்லன்தான்
விஸ்வரூபம், உத்தமவில்லன், பாபநாசம் படங்களில் எந்த படம் முதலில் வரும்?

உத்தமவில்லன்தான்...
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.


Click it and Unblock the Notifications











