என்ன கமல் சார், அரசியல்வாதி ஆனதும் நீங்களே இப்படி பேச்சு மாறலாமா?
Recommended Video

சென்னை: கமல் ஹாஸனின் அறிவிப்பை கேட்டு தான் இப்படி ஒரு தலைப்பு.
இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிக்கப் போவது இல்லை என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக கமல் கூறியுள்ளார்.
கமல் ஹாஸனின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கமல்
இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு கமல் ஹாஸன் தேவர் மகன் 2 படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் உலக நாயகன் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதால் கமல் ஹாஸன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தொழில்
சினிமா என் தொழில். அது தான் எனக்கு சோறுபோட்டது. எனக்கு சோறு போட்ட தொழிலை செய்து கொண்டே மக்கள் சேவை செய்வேன். மக்கள் சேவை செய்வதற்காக என்னை ஆளாக்கிய தொழிலை விட வேண்டும் என்பது இல்லை என்று கமல் ஹாஸன் முன்பு தெரிவித்தார். அதனால் அவர் நடிப்புக்கு முழுக்கு போட மாட்டார் என்று ரசிகர்கள் தைரியமாக இருந்தனர்.

அரசியல்
என்ன கமல் சார், நடிப்பை தொடர்ந்து கொண்டே மக்கள் சேவை செய்வேன் என்று கூறிவிட்டு நீங்களே இப்படி பேச்சு மாறலாமா?. நீங்கள் தொடர்ந்து படங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் உங்களின் சவுகரியமும் முக்கியம் தான். இருப்பினும் ரசிகர்களை இப்படி ஏமாற்றக் கூடாது.

படப்பிடிப்பு
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் வரும் 14ம் தேதி துவங்க உள்ளது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார். இது தான் கமல் ஹாஸன் நடிக்கும் கடைசி படம் என்பதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கமல் தனது மனதை மாற்றிக் கொண்டு நடிப்பை தொடர்வார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











