குடித்துவிட்டு கத்தி, காரை சேதப்படுத்தி ஆட்டம்.. அஜித் கடுப்பாக காரணம் இதுதான்!
சென்னை: நடிகர் அஜித் 'அஜித்குமார் ரேசிங்' என்று தனது சொந்த பந்தய நிறுவனத்தை தொடங்கி கடந்த ஓராண்டிற்கும் மேலாக கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பரிசுகளையும் வென்றுள்ளார். அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டியில் கலந்து கொண்ட அஜித், ரசிகர்களிடம் கடுமையாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அங்கு என்ன பிரச்சனை நடந்தது என்று அவரின் ரசிகர் ஒருவர் வீடியோவில் விளக்கமாக கூறியுள்ளார்.
அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சல்யூட்டில் நடைபெற்ற கார் ரேஸின் போது ரசிகர்களை அஜித் கண்டித்தார். அந்த வீடியோவில் ப்ளீஸ் ஒழுங்கா நடந்துக்கோங்க.. இது தியேட்டர் கிடையாது.. மானம்போகுது என்று கோவமாக பேசியிருந்தார். உண்மையில் மானமே போய்விட்டது. நான் சோசியல் மீடியாவில் பேசக்கூடிய ஆள் இல்லை. நேற்று ரேஸில் என்ன நடந்தது என்பதை பேசுவதற்காக வந்திருக்கிறேன். அதேபோல, நேற்று பல பேர் போட்டோ எடுக்க முடியவில்லை என்றால் வருத்தத்தில் சென்றார்கள். அதற்கு என்ன காரணம் என்று சொல்வதற்காக தான் இங்கு நான் வந்திருக்கிறேன்.

ரசிகர் விளக்கம்: சனிக்கிழமை அஜித் சார், மிகவும் சந்தோஷமாக நடந்து சென்றதை நான் பார்த்தேன். அதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அவை எல்லாம் அப்படியே மாறிவிட்டது. அங்கு என்ன பிரச்சனை நடந்தது என்றால், அஜித் அங்கு நடந்து வரும்போதே, ரசிகர்கள் அனைவரும் கும்பலாக ஓடி வந்து அங்கு இருக்கும் காரை சேதப்படுத்தினார்கள். சில பேர் ஆர்வம் மிகுதியால் காருக்குள் அமர்ந்து போட்டோ எடுக்க முயற்சி செய்தார்கள். அங்கு நடப்பது ஒரு இன்டர்நேஷனல் கார் பந்தய போட்டி என்பதை அனைவரும் மறந்து விட்டார்கள். அதில், இன்னும் சில பேர் மது அருந்திவிட்டு வந்து கூச்சலிட்டு கத்தினார்கள். இது அஜித் சார் அவர்களுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் அவரின் டீமுக்கு பெனாலிட்டி கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் அஜித் அவர்களின் பந்தைய கார் ஸ்டார்ட் ஆவதில் பிரச்சனை இருந்ததால், அஜித் சற்று அழுத்தத்தில் இருந்தார்.
இதுதான் காரணம்: தயவு செய்து, இது போன்ற இடத்திற்கு வரும்போது மது அருந்தாமல் வாங்க, பல பேர் போட்டோ எடுக்க முடியாததற்கு காரணமும், அஜித் அப்படியே கோவமாக பேசியதற்கு காரணமும் இதுதான். இதையெல்லாம் மக்களிடம் எடுத்து சொல்லி புரியவைங்க என்று அஜித் அங்கிருந்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டதால் தான். நான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இது ஒரு சர்வதேச விளையாட்டு, விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். நாம தான் அஜித்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஒரு ரசிகர் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











