தலைவன் வந்துட்டான்டா.. சிம்புவின் புதிய லுக்கால் உற்சாகத்தில் ரசிகர்கள்.. காரணம் இதுதான் மக்களே!
நடிகர் சிம்புவின் புதிய ஹேர் ஸ்டைல் மற்றும் கெட்டப் இணையத்தில் பெரிய வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: நடிகர் சிம்புவின் புதிய ஹேர் ஸ்டைல் மற்றும் கெட்டப் இணையத்தில் பெரிய வைரலாகி வருகிறது.
சமீப காலமாக புள்ளிங்கோ என்று வார்த்தை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. வித்தியாசமான சிகை அலங்காரம் வைத்து இருக்கும் பசங்களை புள்ளிங்கோ என்று அழைத்து வருகிறார்கள்.
தற்போது சிம்புவும் அப்படித்தான் புதிய ஹேர் ஸ்டைல் உடன் ''சிம்புள்ளிங்கோவாக'' உருமாறி வந்துள்ளார். இதற்கு பின் நிறைய காரணம் இருக்கிறது மக்களே.

எப்படி
நடிகர் சிம்பு இப்போது நல்ல ஹிட் படம் ஒன்றை கொடுப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார். ஏஏஏ, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்கள் அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. செக்க சிவந்த வானத்திற்கு பின் நடிகர் சிம்புவிற்கு ஹிட் படம் எதுவும் வெளியாகவில்லை.

என்ன முடிவு
சிம்பு விண்ணை தாண்டி வருவாயா போல ஒரு ஹிட் கொடுக்க மாட்டாரா என்று ரசிகர்கள் இன்னும் காத்து இருக்கிறார்கள். சிம்புவும் தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளை தவறவிட்டுக் கொண்டு இருக்கிறார். நிறைய முக்கியமான படங்கள் டிராப் ஆனது. முக்கியமாக கான் படம் அதன்பின் தற்போது மாநாடு படம் ஆகிய படங்களை தவறவிட்டுவிட்டார்.

ஏன் இன்னும் இல்லை
மாநாடு படம் டிராப் ஆகி, அதில் மீண்டும் சிம்பு நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக்கில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார்.

என்ன வெளிநாடு
இதற்காக நடிகர் சிம்பு வெளிநாடு சென்று உடலை குறைத்துள்ளார். ஜிம் சென்று உடலை பிட்டாக மாற்றி உள்ளார். இதற்காக அங்கு அவர் தீவிரமாக இரண்டு மாதம் பயிற்சி செய்துள்ளார். அதேபோல் படத்திற்காக லுக் மாற்ற வேண்டு என்று கூறி உள்ளனர். அதையும் அமெரிக்காவிலேயே செய்துள்ளார்.

என்ன சிகிச்சை
அமெரிக்காவிற்கு சிறப்பு பயிற்சி மட்டுமில்லை, உடல் எடை தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளவும் அவர் சென்றார். உடல் எடையை தீவிரமாக குறைக்க அவர் கடுமையான பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்.

இதுதான் காரணம்
மப்டி படத்தின் லுக்கிற்காக வைத்திருக்கும் கெட்டப்தான் இது என்று கூறுகிறார்கள். கருப்பு உடையில் தாடி வைத்து வித்தியாசமான ஹேர்ஸ்டைல் உடன் அவர் இருக்கிறார். அவரின் இந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. சிம்பு ஆர்மியும்.. எங்க தலைவன் படம் விடலைனா என்ன.. இந்த படமே போதும் பாஸ் என்று சந்தோசமாக இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











