பி.எம்.டபுள்யூ. கார், போயஸ் கார்டன் வீடு, 7 ஸ்டார் ஹோட்டலில் உணவு, நான் சிம்பிளா?: ரஜினி
Recommended Video

சென்னை: தான் எளிமையானவர் என்று அனைவரும் கூறுவதற்கு ரஜினி வித்தியாசமான பதில் அளித்துள்ளார்.
பல காலம் கழித்து ரஜினிகாந்த் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஒளிபரப்பான அந்த பேட்டியின்போது பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியின்போது ரஜினி 2.0 படம் பற்றி கூறியதாவது,

2.0
எந்திரனில் இருந்து கதாபாத்திரங்கள் மட்டுமே 2.0 படத்தில் உள்ளது. சிட்டி, வசீகரன், 2.0 மட்டுமே அப்படியே இதற்கு வந்துள்ளது. மற்றபடி இரண்டு படங்களுக்கும் இடையே தொடர்பே இல்லை. 2.0 படத்தில் தற்போதைக்கு தேவையான மெசேஜ் கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர். அந்த மெசேஜ் அனைவருக்கும் பொருந்தும்.

ரஹ்மான்
2.0 படத்தில் பாடலே இருக்கக் கூடாது என்று முடிவு செய்தார் ஷங்கர். அதன் பிறகு ஒவ்வொரு பாடலாக சேர்க்கப்பட்டது. பின்னர் 4 பாடல்கள் சேர்க்கப்பட்டது. இந்த படத்தை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். படத்தின் விஷுவலுக்கு ரஹ்மான் அருமையான பேக்கிரவுண்ட் ஸ்கோர் கொடுத்துள்ளார்.

பிடித்த பாடல்
நான் அடிக்கடி கேட்கும் பாடல் போனால் போகட்டும் போடா. சின்ன வயதில் இருந்து தற்போது வரைக்கும் அது தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்த பாடலை கேட்டால் அப்படியே நின்றுவிடுவேன். முதலில் தமிழ் தெரியாமல் கேட்டேன். பின்னர் தமிழ் நண்பர் ஒருவரிடம் அர்த்தம் கேட்டுத் தெரிந்த பிறகு அது மேலும் பிடித்துவிட்டது.

சந்தோஷம்
கனவு காணும்போது இருக்கும் சந்தோஷம் அது நினைவாகும்போது பெரிதாக இருக்காது. இது என் முதல் கட்அவுட் துவங்கி திருமணம் வரை பொருந்தும். சிம்பிளிசிட்டி என்று சொல்வது தெரியவில்லை. நான் போவது பிஎம்டபுள்யூ கார். நான் இருப்பது போயஸ் கார்டன் வீட்டில். 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டல்களுக்கு சாப்பிட போவது. இதில் சிம்பிளிசிட்டி எப்படி என்று புரியவில்லை.

கஷ்டம்
2.0 படத்தில் நல்ல சிட்டி, கெட்ட சிட்டி மற்றும் ஒன்று உள்ளது. அதை நான் தற்போதே சொல்ல விரும்பவில்லை. ரோபோ படத்தில் சிட்டியாக நடிக்க கஷ்டப்பட்டேன். 2.0 படத்தில் என் பாடி லேங்குவேஜை மேம்படுத்த ஷங்கர் உதவி செய்தார். பெண்ட் எடுத்துவிட்டார்கள். இந்த படத்தில் மேக்கப் உள்ளிட்ட விஷயங்களில் அக்ஷய் குமாருக்கு தான் கஷ்டம் என்றார் ரஜினி.


Click it and Unblock the Notifications











