லால் சலாம் ஆடியோ லாஞ்சில் விஜய்க்கு ஸ்கெட்ச் இல்லையாம்.. அப்போ இந்த முறை அந்த நடிகருக்கா?

சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா - கழுகு சொன்னது காட்டுத்தீ போல பற்றிக் கொண்ட நிலையில், லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் இந்த காக்கா, கழுகு என சொல்லிவிட்டு அப்பா சட்டையை மகன் போட ஆசைப்படக் கூடாதா? என கேட்கும் அளவுக்கு பிரச்சனை பெரிதாக வெடித்தது.

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான வேட்டையன் அறிமுக டீசரில் கழுகு சத்தம் கேட்குது பார்த்தீங்களா என செய்யாறு பாலு, பிஸ்மி எல்லாம் வீடியோ போட்டு சண்டை மூட்டி வருகின்றனர்.

This time Rajinikanth will target Dhanush and not Vijay at Lal Salaam Audio Launch?

இந்நிலையில், அடுத்து லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை டார்கெட் செய்து ரஜினி பேச போவதில்லை என தகவல்கள் கசிந்துள்ளன.

லால் சலாம் ஆடியோ லான்ச்: டிசம்பர் 21ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் லால் சலாம் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை லால் சலாம் படத்தை ரஜினிகாந்த் படமாகவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ப்ரோமோட் செய்து வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் தான் இந்த படத்தின் ஹீரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கேமியோவாக நடித்து வரும் ரஜினிகாந்தின் பேச்சை ஆடியோ வெளியீட்டு விழாவில் கேட்கத்தான் ரசிகர்கள் வெயிட்டிங்.

விஜய்யை வம்பிழுப்பாரா?: வேட்டையன் டீசரில் மீண்டும் கழுகு சத்தத்தை போட்டு குறி வச்சா இரை விழணும் என இரையை தேடி கழுகு கீழே வந்து காக்கா போல கத்திக் கொண்டு அலையாது என்பதை உணர்த்தும் விதமாக பஞ்ச் வசனம் வைத்து இருப்பதாக பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை வம்பிழுப்பாரா ரஜினி என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தனுஷ் தான் டார்கெட்: ஆனால், இந்த முறை விஜய் இல்லை என்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துக்கு போட்டியாக கேப்டன் மில்லர் படத்தை ரிலீஸ் செய்யும் மருமகன் தனுஷ் தான் ரஜினியின் டார்கெட் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன. கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா அதே நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X