Prashanth - பிரசாந்துக்கு ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்.. இயக்குநரிடம் மல்லுக்கு நின்ற தியாகராஜன்

சென்னை: Prashanth (பிரசாந்த்) பிரசாந்த்துக்கு ஐஸ்வர்யா ராய்தான் ஜோடியாக வேண்டும் என அவரது தந்தை தியாகராஜன் தெரிவித்தாராம்.

நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்தவர். தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

Thiyagarajan said that Aishwarya Rai is Should Be heorine With Prashanth

முதல் படமே மெகா ஹிட்டானது. அழகும், திறமையும் ஒருசேர இருந்ததாலும்; முதல் படமே மெகா ஹிட்டானதாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன.

பாலுமகேந்திராவுடன்: குறிப்பாக பிரசாந்த்துக்கு இரண்டாவது படத்திலேயே பாலுமகேந்திரா இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. வண்ண வண்ண பூக்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் பிரசாந்த்துக்கு மேற்கொண்டு சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து நடித்த செம்பருத்தி, எங்க தம்பி படங்களும் ஹிட்டானது.

திருடா திருடா: தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக இப்போது டாப் ஸ்டார்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோரைவிடவும் உயர்ந்த நிலையில் 90களில் இருந்தவர் பிரசாந்த்.

சறுக்கல்: இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்னைதான் என கூறப்படுகிறது. மேலும் அந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை எனவே வாய்ப்புகள் குறைந்துபோயின என்ற கூற்றும் உண்டு. ஒருகட்டத்தில் பிரசாந்த் நடிக்காமல் ஒதுங்கிவிட்டார்.

தந்தைதான் காரணம்: அதேபோல் பிரசாந்த் காணாமல் போனதற்கு மனைவி பிரச்னை மட்டுமில்லை அவரது கரியரில் தந்தையான தியாகராஜனின் தலையீடு ரொம்பவே இருந்தது. அதுவும் ஒரு காரணம் என பேசப்பட்டதுண்டு. இந்நிலையில் செய்யாறு பாலு பிரசாந்த் குறித்து ஒரு விஷயம் பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித் நடித்த கேரக்டரில் முதலில் பிரசாந்த்தான் நடிக்க வேண்டியது.

ராஜீவ் மேனன் அதுதொடர்பான பேச்சுவார்த்தையை தியாகராஜனிடம் நடத்தினார். அப்போது தியாகராஜன் ராஜீவ் மேனனிடம், பிரசாந்த்துக்கு யார் ஹீரோயின் என்று கேட்டார். தபு என்று ராஜீவ் சொல்ல; இல்லை ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக போடுங்கள்; அப்போதுதான் பிரசாந்த் நடிப்பார் என்று கறாராக கூறினார். ஆனால் ராஜீவ் மேனனோ இல்லை அப்படி முடியாது. நாங்கள் ஹீரோவை மாற்றிக்கொள்கிறோம் என்று சொல்லி பிரசாந்த்துக்கு பதிலாக அஜித்தை நடிக்க வைத்தார்” என்றார். பிரசாந்த் இப்போது தளபதி 68 படத்தில் முக்கியமான ரோலில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X