தளபதி 69 படத்தை இத்தனை பேர் ரிஜெக்ட் செய்தார்களா?.. இது என்ன புது கதையா இருக்கு
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான GOAT திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அந்தப் படத்துக்கு முன்னதாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்களும்கூட பெரிய வரவேற்பை பெறவில்லை. இப்படி வரிசையாக நான்கு படங்கள் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றதன் காரணமாக விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்தான். இந்தச் சூழலில் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்.
விஜய் நடிப்பில் கடைசியாக GOAT படம் வெளியானது.விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தது, விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக கூட்டணி வைத்தது என இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

கலவையான விமர்சனம்: படம் வெளியான முதல் நாளான செப்டம்பர் ஐந்தாம் தேதி விஜய்யின் ரசிகர்கள் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள். விஜய்யை வைத்து தரமான கமர்ஷியல் படத்தை வெங்கட் பிரபு செய்துவிட்டதாக கூறினார்கள். ஆனால் பொதுவான ரசிகர்களை பொறுத்தவரை படத்துக்கு சுமார் விமர்சனம்தான் கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக பழைய கதை; திரைக்கதையில் புதுமை செய்யும் வெங்கட் பிரபு இந்தப் படத்தில் ஏகத்துக்கும் சொதப்பிவிட்டார் என்றுதான் ஓபனாக பலரும் பேசினார்கள்.
நல்ல வசூல்: அதேசமயம் படம் விமர்சன ரீதியாக அப்படி இப்படி பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருப்பதாக கூறப்படுகிறது. படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இதுவரை 400 கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் படத்துக்கு வசூல் ரீதியாகவும் நல்ல விதமான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என ஒரு தகவலும் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 69: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவிருக்கிறது. இதனையொட்டி அரசியலுக்கான அத்தனை முன்னெடுப்புகளையும் அவரும், அவரது கட்சியினரும் இப்போதே எடுக்கவிருக்கிறார்கள்.மேலும் அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கிறார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குவதாக கூறப்பட்டாலும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பாக படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பு வீடியோவே கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்துவதாக தளபதி ரசிகர்கள் உற்சாகத்தோடு கூறிவருகிறார்கள்.
புதிய தகவல்: இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கமலுக்கு எழுதிய கதைதான் இந்தப் படம் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று பேசப்பட்ட நிலையில்; இந்தக் கதையை மூன்று நடிகர்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஏழு வருடங்களுக்கு முன்பே வினோத் இந்தக் கதையை எழுதிவிட்டதாகவும்; முதலில் விஜய் சேதுபதி, தனுஷ், அஜித் ஆகிய மூன்று பேரிடமும் இந்தக் கதையை சொல்ல; மூவருமே ஏதோ ஒரு காரணம் சொல்லி இந்தக் கதையை நிராகரித்துவிட்டதாகவும்; அதில்தான் விஜய் இப்போது நடிக்கிறார் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











