'வெற்றி வேல்' சசிகுமாருக்கு ஒன்றல்ல.. மூன்று நாயகிகள்!
பல முன்னனி நடிகர்கள் நடித்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட படங்களை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மூலம் வெற்றிகரமாக வினியோகம் செய்த ஆர் .ரவீந்திரன், 'வெற்றிவேல்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
தாரை தப்பட்டை படம் ஷூட்டிங்கில் இருந்த போதே சசிகுமார் நடித்த படம் இந்த வெற்றிவேல்.
ஜில்லா படத்தில் இயக்குனர் நேசனிடம் உதவியாளராக பணிபுரிந்த வசந்தமணி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

முக்கிய வேடத்தில் பிரபு மற்றும் தம்பி ராமையா இப்படத்தில் நடிக்கின்றனர். மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷா என முன்று கதாநாயகிகளுடன் எம்.சசிகுமார் நடிக்கின்றார்.
காதலையும் குடும்பத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து கலவைகளையும் கலந்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கபட்டுள்ளது.
டி இமான் படத்திற்கு இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
தஞ்சாவூர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது.
தற்போது இறுதிக் கட்டப் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ள வெற்றிவேல் படக்குழு, இப்படத்தின் இசை வெளியிடு வரும் மார்ச் 18 அன்று நடைபெறும் என்றும், இப்படம் மிக விரைவில் பட வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது


Click it and Unblock the Notifications











