Kamal: பிக் பாஸ் முடித்த கையோடு கமல் எடுத்த அதிரடி முடிவு... இனி நான் ஸ்டாப் அப்டேட்ஸ் தான்..!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தார். இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த கையோடு, பிக் பாஸ் சீசன் 7ம் முடிவுக்கு வந்தது. அதேநேரம் தனது 237வது படம் குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்டேட் கொடுத்திருந்தார். இதனையடுத்து அவர் இன்னொரு அதிரடி முடிவும் எடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கமல் எடுத்த தக் லைஃப் முடிவு: விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார் கமல்ஹாசன். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, தெலுங்கில் பிரபாஸுடன் கல்கி படங்களில் நடித்துள்ள அவர், தொடர்ந்து மணிரத்னம், அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். அதன்படி, கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு தக் லைஃப் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 Thug Life: Kamals Thug Life Shooting on January 22 Starts In Chennai

நாயகன் படத்துக்குப் பின்னர் மீண்டும் ஒரு கேங்ஸ்டர் ஜானர் மூவியில் கமல் - மணிரத்னம் கூட்டணி இணைவது குறிப்பிடத்தக்கது. இதனால் தக் லைஃப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன்னரே KH 234 என்ற டைட்டிலில் இந்தப் படம் குறித்து அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், இந்தியன் 2, கல்கி, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி என கமல் பிஸியாக இருந்ததால் தக் லைஃப் ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில், தற்போது இந்தியன் 2, பிக் பாஸ் சீசன் 7 இரண்டும் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் தக் லைஃப் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள கமல் ரெடியாகிவிட்டாராம். மணிரத்னமும் தக் லைஃப் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்டதால் ஷூட்டிங் செல்ல லொக்கேஷன் பார்த்து முடிவு செய்துவிட்டாராம்.

அதன்படி தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் வரும் 22ம் தேதி முதல் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கும் மணிரத்னம், அதன் பின்னர் பல லொக்கேஷன்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம். 22ம் தேதி தொடங்கும் படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாகவும், அவருடன் த்ரிஷாவும் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் த்ரிஷா, தக் லைஃப் படப்பிடிப்புக்காக விரைவில் சென்னை வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தக் லைஃப் படத்தை செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதிக்குள் முடித்துவிடவும் மணிரத்னமும் கமலும் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X