விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் நேரடியாக தொலைக்காட்சியில்... ரிலீஸ் தேதி வெளியானது!
சென்னை : தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பம்பரமாய் சுற்றி நடித்து வரும் விஜய் சேதுபதி தமிழில் ஒரு டஜன் திரைப்படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.
ஜாலியான கதாபாத்திரம், மிரட்டலான வில்லன் கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதை இயல்பான நடிப்பின் மூலம் மிகச் சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய விஜய் சேதுபதி இப்பொழுது அரசியல் படத்தில் நடித்து வருகிறார்.
துக்ளக் தர்பார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி அரசியல் வாதிகளாக நடித்திருக்க படம் நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்யப்படும் தேதி தற்போது தெரியவந்துள்ளது .

மலையாள சினிமாவில்
முன்னணி ஹீரோ என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ரசிகர்களுடன் இயல்பாகப் பழகக் கூடிய பண்பு கொண்ட விஜய் சேதுபதிக்கு எல்லைகள் தாண்டி பல மாநிலங்களிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் எந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே அளவிற்கு தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். இதன் பொருட்டு இப்பொழுது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். மார்க்கோனி மாதாய் என்ற படத்தில் ஜெயராம் உடன் இணைந்து நடித்து மலையாள சினிமாவில் கால் தடத்தைப் பதித்த விஜய்சேதுபதி அதைத் தொடர்ந்து இப்போது நித்யா மேனன் உடன் இணைந்து 19 a 1என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த கதை காட்டுப் பகுதிகளில் நடப்பதால் இதன் படப்பிடிப்பு முழுவதும் கேரளாவில் உள்ள காட்டு பகுதியில் நடைபெற்று வந்தது. நித்யா மேனனுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையேயான காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டிருந்தது . சைரா நரசிம்மா ரெட்டிக்கு பிறகு விஜய் சேதுபதி தெலுங்கில் முழுநீள கதாபாத்திரத்தில் நடித்த உப்பனா சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஜய் சேதுபதிக்கு ஹீரோவை விடவும் வில்லன் கதாபாத்திரம் மிகவும் கச்சிதமாக பொருந்துகிறது என நினைத்த படக்குழு உப்பனா படத்தில் வில்லனாக சேதுபதியை களமிறக்கி எதிர்பார்த்ததை விடவும் பல மடங்கு கல்லா கட்டினர். முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருந்த உப்பனா 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.

வில்லனாக நடிக்க
உப்பனா மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சென்டிமென்ட்டாக மீண்டும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றது. நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமாரன் கூட்டணியில் உருவாகிவரும் புஷ்பா திரைப்படத்தில் தான் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க தீவிர முயற்சி நடைபெற்றது . ஆனால் விஜய்சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் என பல மொழிகளில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் குறிப்பிட்ட தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு புஷ்பா படத்தில் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் ஃபகத் பாசில் நடித்து வருகிறார்.

அரசியல்வாதியாக
எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் அதன் படப்பிடிப்பை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்துக் கொடுக்கும் பழக்கம் கொண்ட விஜய் சேதுபதிக்கு தமிழில் மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, போன்ற படங்கள் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்க இதுவரை ஜாலியான மற்றும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் இப்போது முதல்முறையாக அரசியல்வாதியாக துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் டெல்லி தீனதயாளன் இயக்கியுள்ளார் இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். முதல் முறையாக விஜய் சேதுபதி அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க மேலும் சுவாரஸ்யம் கூட்டும் வகையில் இதில் பார்த்திபனும் அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா,காயத்ரி, மஞ்சிமா மோகன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தெரிகிறது.

நேரடியாக சன் டிவியில்
பார்த்திபனின் நக்கல் பேச்சு விஜய்சேதுபதியின் இயல்பான நடிப்புடன் உருவாகிவந்த துக்ளக் தர்பார் சென்ற ஆண்டே அனைத்து கட்ட பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியிட முடியாமல் போனது. இந்த நிலையில் துக்ளக் தர்பார் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட நீண்ட நாட்களாக தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வந்தது. ஆனால் ஓடிடியிலும் இப்படம் வெளியாக வில்லை மாறாக நேரடியாக தொலைக்காட்சியில் இப்படம் ரிலீசாகிறது. தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான சன் டிவி யில் நேரடியாக வெளியிடப்படுவதாக கூறப்பட்டது.

தீபாவளிக்கு உறுதி
அது இப்பொழுது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு துக்ளக் தர்பார் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த படக்குழு இப்பொழுது சற்று முன்பாகவே செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்புகிறது. மேலும் துக்ளக் தர்பார் படத்தின் ஆடியோ வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அண்ணாத்த சேதி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











