துள்ளாத மனமும் துள்ளும் படத்தை வாரா வாரம் தியேட்டரில் பார்த்த நடிகர் #20YearsOfEvergreenSuperhitTMT
Recommended Video

சென்னை: விஜய், சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.
எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. விஜய் மட்டும் அல்ல சிம்ரனின் கெரியரிலும் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது.
விஜய், சிம்ரன் ஜோடி கொண்டாடப்பட்ட ஜோடியானது.

சிம்ரன்
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே ஹிட்டானது. அந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. விஜய், சிம்ரன் தங்களின் அபார நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அந்த படம் ரிலீஸாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ட்விட்டர்
#20YearsOfEvergreenSuperhitTMT என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி பிற நடிகர்களின் ரசிகர்களும் கொண்டாடிய படமாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய், சிம்ரனின் நடிப்பை ரசிக்காமல் இருக்கவே முடியாது.

கியூட்
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய் பன்ச் வசனம் எதுவும் பேசவில்லை, மாஸ் காட்டவில்லை. அவர் சாதாரணமாக தலையை அசைத்து கியூட்டாக சிரித்ததே ரசிகர்கள், ரசிகைகளை கவர்ந்தது.
பிடித்த படம்
துள்ளாத மனமும் துள்ளும் படத்தை பார்த்து தான் சிபிராஜ் விஜய் மற்றும் சிம்ரனின் தீவிர ரசிகர் ஆனார். பேபி ஆல்பர்ட் தியேட்டரில் அந்த படத்தை கிட்டத்தட்ட அனைத்து வார இறுதிநாட்களிலும் பார்த்துள்ளார் அவர். #20YearsOfEvergreenSuperhitTMT


Click it and Unblock the Notifications











