சிவகார்த்திகேயன் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இணைந்த துப்பாக்கி பட வில்லன்.. மாஸ் டீமா இருக்கே!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் -ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் எஸ்கே 23. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்துள்ள அமரன் படத்தின் நிறைவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படம் ராணுவ கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
அமரன் படம் செப்டம்பர் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் தற்போது எஸ்கே 23 படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் சிவகார்த்திகேயன் செலுத்தி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அமரன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது/ இந்த படம் செப்டம்பர் மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது/ ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழுவினர் இன்னும் மேற்கொள்ளவில்லை, இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள சூழலில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ராணுவ கதைக்களத்தை மையமாகக் கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ள சூழலில் காஷ்மீரில் படத்தின் அதிகபட்சமான ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அமரன் படம்: தொடர்ந்து சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அமரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய எஸ்கே 23 படத்திற்காக ஏஆர் முருகதாசுடன் இணைந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் இணைந்துள்ளார். ஆக்ஷன் என்டர்டெயினராக இந்தப் படம் உருவாகி வருகிறது.
எஸ்கே 23 பட வில்லன்: தனிடையே இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் இணைந்துள்ளதாக இன்றைய தினம் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் வித்யுத் ஜம்வால். இந்நிலையில் தற்போது மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இணைந்துள்ளார். படத்தில் அவர் அதிரடி வில்லனாக நடிக்க உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் சூட்டிங்கில் அவர் இணைந்துள்ள வீடியோவையும் படக் குழு வெளியிட்டுள்ளது. விரைவில் எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் உருவாக உள்ள படத்தில் இணைய உள்ளார் ஏஆர் முருகதாஸ்.
அதிரடி வீடியோ: இந்நிலையில் எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங்கை அவர் விரைவுப் படுத்தி உள்ளார். இந்தப் படத்தில் அடுத்தடுத்த வித்தியாசமான கெட்டப்புகளில் சிவகார்த்திகேயனை பார்க்க முடிகிறது. படத்தில் கிளீன் ஷேவுடனும் நீண்ட தாடியுடனும் அவர் காணப்படும் அடுத்தடுத்த சூட்டிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் தற்போது வித்யுத் ஜம்வால் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு இணைந்துள்ளது மேலும் எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











