Don't Miss!
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா பறந்தார் துப்பறிவாளன்
சென்னை : கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளார் விஷால். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், துப்பறிவாளன் 2 படத்தின் முதல் லெக் முடிவடைந்து இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் .
நடிகர் விஷால் அயோக்யா மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு பிறகு நடித்து வரும் படம்தான் துப்பறிவாளன் 2 .இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முடிந்ததால் தற்போது விஷால் ப்ரீயாக இருக்கிறார்.
இதையடுத்து வர இருக்கும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட விஷால் தனது நண்பனுடன் அமெரிக்கா சென்று இருக்கிறார். இந்த தகவலை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ,அதில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகாக அமெரிக்கா சென்றுள்ளேன் ஏனெனில் துப்பறிவாளன்2 படத்தின் முதல் லெக் முடிவடைந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார் .
அதன் பின் துப்பறிவாளன் 2 மற்றும் டிடக்டிவ் 2 என்ற ஹாஸ்டேக்கையும் பதிவேற்றி இருக்கிறார் .துப்பறிவாளன் படம் மாபெரும் வெற்றி அடைந்த படம் விஷால் படங்களில் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் என்று கூட சொல்லலாம் .இந்த படத்தின் தொடர்ச்சியாக எடுக்க பட்டு வரும் துப்பறிவாளன் 2 படத்தை வேறு மொழிகளிலும் விஷால் வெளியிட தயாராகி இருக்கிறார் என்று தெரிகிறது.
ஏனெனில் டிடக்டிவ் என்ற ஹாஸ்டேக்கை இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருந்து விஷால் பயன்படுத்தி வருகிறார் .அதை வைத்து பார்க்கும் போது இந்த படம் வேறு மொழிகளிலும் நேரடியாக வெளிவர வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிகிறது .
துப்பறிவாளன் படத்தை போலவே இரண்டாம் பாகத்தையும் விஷாலே தயாரிக்கிறார் .இந்த படத்தை முதல் பாகத்தை போலவே இயக்குனர் மிஸ்கின் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் விஷால் ,பிரசன்னா , கௌதமி, ரஹ்மான், நாஸர், சுரேஷ் சக்கரவர்த்தி , நந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் .படத்திற்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. இந்த படத்தின் முதல் பாகத்திற்கு ஆரோல் கொரல்ளி இசையமைத்தார் .
தற்போது லண்டனில் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழு இந்தியா திரும்பியுள்ளது . அடுத்த கட்ட படிப்பிடிப்பு இந்தியாவில் எடுக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. பிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் இந்த படத்தை தயாரித்துள்ளார், இந்த படத்திற்கு பிறகு விஷால் சக்ரா படத்தில் நடிக்க உள்ளார் .தற்போது அமெரிக்காவில் இருக்கும் விஷால் இந்தியா வந்தவுடன் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது .
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்