'துப்பாக்கி' மூலம் மறுபடியும் 'பன்ச்' பாதையில் விஜய்!

By Sudha

சென்னை: கொஞ்ச படங்களுக்கு முன்பு வரை அடுத்தடுத்து பன்ச் வசனங்கள், பட்டையைக் கிளப்பும் சண்டைகள், லாஜிக்கே இல்லாத காட்சிகள் என விஜய் படங்கள் சரமாரியாக வெளியாகின. ஆனால் தொடர் தோல்விகளால் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். ஆனால் தற்போது துப்பாக்கி மூலம் மீண்டும் 'பன்ச்' டயலாக்குகளை கையில் எடுத்துள்ளாராம் விஜய். டிரெய்லரில் இடம் பெற்ற அவர் பேசியுள்ள ஐ அம் வெயிட்டிங் என்ற வசனம் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது.

மாஸ் ஹீரோவாக மாற்றிய பகவதி

மாஸ் ஹீரோவாக மாற்றிய பகவதி

ஆரம்பத்தில் சொதப்பலாக நடித்து வந்த விஜய், பின்னர் தொடர்ந்து ஹிட்களைக் கொடுக்க ஆரம்பித்தார். 2000மாவது ஆண்டில் பலமான மாஸ் ஹீரோவாக மாறத் தொடங்கினார். அதற்குப் பிள்ளையார் சுழி போட்ட படம் பகவதி.

முதல் 'குத்து' திருமலையில்

முதல் 'குத்து' திருமலையில்

பகவதி அவருக்கு மிகப் பெரிய ஹிட் படமாக இருந்தாலும் முதல் முறையாக விஜய்யிடம் பன்ச் டயலாக்குகளை எழுதி கையில் நீட்டி வாய் மூலம் பேச வைத்த படம் திருமலைதான். எக்குத்தப்பாக இந்தப் படமும், அந்தப் படத்தில் அவர் பேசிய வசனங்களும் ஹிட் ஆனதால் அன்று முதல் பன்ச் டயலாக்குகளை படு பத்திரமாக பாலோ பண்ண ஆரம்பித்தார் விஜய்.

வாழ்க்கை ஒரு வட்டம்டா...

வாழ்க்கை ஒரு வட்டம்டா...

வாழ்க்கை ஒரு வட்டம்டா. அதுல ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்கிறவன் ஜெயிப்பான்... திருமலையில் இடம் பெற்ற இந்த வசனம் விஜய் ரசிகர்களிடையே பெரும் ஹிட் ஆனது. மற்றவர்களிடமும் கூட இந்த வசனம் வேகமாக ரீச் ஆனது.

ஆல் ஏரியாவிலேயே ஐயா கில்லி

ஆல் ஏரியாவிலேயே ஐயா கில்லி

அதேபோல கில்லி படத்தில் வந்த வசனங்களும் ஹிட் ஆகின. அந்த ஏரியா, இந்த ஏரியா இல்லை, ஆல் ஏரியாவிலேயும் ஐயா கில்லி.. கில்லிடா என்று அவர் பேசியபோது தியேட்டரில் ரசிகர்களின் கூக்குரல் வானத்தைப் பிளந்தது.

ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா...

ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா...

இதேபோல மெகா ஹிட் அடைந்த இன்னொரு பன்ச் வசனம் போக்கிரியில் இடம் பெற்றது. ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்... போக்கிரி படத்தை மிகப் பெரிய ஹிட்டாக்க உதவியது இந்த வசனம்.

'கன்'னும் எனக்குத்தான், பொண்ணும் எனக்குத்தான்

'கன்'னும் எனக்குத்தான், பொண்ணும் எனக்குத்தான்

போக்கிரியில் நிறைய பன்ச் இடம் பெற்றது. அதில், இன்னொரு ஹிட் வசனம்.. கன்னும் எனக்குத்தான், பொண்ணும் எனக்குத்தான்.

பக்கத்து வீட்டுப் பையன்.. எதுத்த வீட்டு மாமா

பக்கத்து வீட்டுப் பையன்.. எதுத்த வீட்டு மாமா

அதே போக்கிரியில் இடம் பெற்ற இன்னொரு ஹாஸ்யமான வசனம் இது. பிரகாஷ் ராஜ், விஜய்யைப் பார்த்து, ஒன்னப் பார்த்தா பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருக்கு என்பார். அதற்கு முகத்தில் சலனமே இல்லாமல், உன்னைப் பார்த்தா கூடத்தான் எதுத்த வீட்டு மாமா மாதிரி இருக்கு என்பார்.

நம்ம பேச்சு மட்டும்தான் சைலன்ட்டா இருக்கும்...

நம்ம பேச்சு மட்டும்தான் சைலன்ட்டா இருக்கும்...

குருவி படத்தில் வந்த பன்ச் வசனங்களும் அவரது ரசிகர்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது, படம் போண்டியானாலும் கூட. நம்ம பேச்சு மட்டும்தான் சைலன்ட்டா இருக்கும். ஆனா அடி சரவெடி என்று அவர் வசனம் பேசியபோது தியேட்டரில் ரசிகர்கள் டவுசர் கிழிந்து போகும் அளவுக்குத் துள்ளிக் குதித்துக் குதூகலித்தனர்.

கடல்னா சுறா.. காத்துன்னா சூறாவளி..

கடல்னா சுறா.. காத்துன்னா சூறாவளி..

குருவியில் இடம் பெற்ற இன்னொரு ஹிட் வசனம்... காடுன்னா நான் சிங்கம், கடல்னா சுறா.. காத்துன்னா சூறாவளி.

சாமி முன்னாடி மட்டும்தான் சாந்தமா பேசுவேன்...

சாமி முன்னாடி மட்டும்தான் சாந்தமா பேசுவேன்...

இதேபோல இன்னொரு படமான வேட்டைக்காரன் விஜய்க்கு வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் கூட அதில் இடம் பெற்ற பன்ச் வசனங்களை கண்டிப்பாக ஹிட் வரிசையில் சேர்த்தே ஆக வேண்டும். சாமி முன்னாடி மட்டும்தான் சாந்தமா பேசுவேன். சாக்கடை முன்னாடி இல்லை... என்ற வசனம் ஹிட் ஆனது.

மாமன் மச்சான் கிட்ட விளையாடு

மாமன் மச்சான் கிட்ட விளையாடு

வில்லு படத்தில் வந்த மாமன் மச்சான் கிட்ட விளையாடு, மாப்பிள்ளை கிட்ட விளையாடாத என்ற வசனமும் ஹிட் ஆனது.

மன்னர்னு பார்க்க மாட்டேன்.. மண்ணாங்கட்டின்னு பார்க்க மாட்டேன்

மன்னர்னு பார்க்க மாட்டேன்.. மண்ணாங்கட்டின்னு பார்க்க மாட்டேன்

சுறா படத்திலும் ஏகப்பட்ட பன்ச்கள்.. காதுகள் பஞ்சர் ஆகும் அளவுக்கு. அதில், அவர் பேசிய மோதுறதுன்னா மன்னர்னு பார்க்க மாட்டேன், மண்ணாங்கட்டின்னு பார்க்க மாட்டேன் என்ற வசனம் ஹிட் ஆனது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X